என் மலர்
நீங்கள் தேடியது "தோவாளை கால்வாய்"
- நூற்றுக்கணக்கான பயணிகள் பல ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
- சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில், ஜூலை.3-
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கி ழமையான இன்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றுக்கொண்டார். பூதப்பாண்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திட்டுவிளை பஸ் நிலையத்தில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள், வியாபாரிகள் நூற்றுக்கணக்கான பயணிகள் பல ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பஸ் வந்து நிற்கும் இடத்தின் அருகே பயணிகள் நிழற்கூடை இல்லாமல் தூரத்தில் இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
எனவே மக்களின் நலன் கருதி பஸ் நிறுத்தம் இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்ட கிளை துணை தலைவர் நாகராஜன் தலைமையில் விவசாயிகள் ரவி, அழகேசன் உள்பட பலர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், தோவாளை சானல் கடைமடை நிலப்பாறை கால்வாய் வாலசவுந்தரி குளத்திற்கு போதுமான அளவு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த குளம் நிரம்பினால் தான் அருகே உள்ள மற்ற குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். தற்போது வாலசவுந்தரி குளத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாததினால் சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தோவாளை கால்வாயில் அதிக தண்ணீர் விட்டு மற்ற குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அவர்களின் உடமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. காரில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.