என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு கிடைக்காமல்"

    • ஏற்காடு பிலியூரில் உண்டு உறைவிட பள்ளியில் விடுதி காப்பாளர் மாற்றப்பட்டார்.
    • இதனால் மாணவர்கள் உணவின்றி தவிப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிலியூரில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் அசோக் என்பவர் காப்பாளராக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீரென கருமந்துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அந்த விடுதியில் தங்கி படித்த 41 மாணவ, மாண விகள் சாப்பாடு கிடைக்கா மல் தவித்து வருகிறார்கள்.

    எனவே உடனடியாக இந்த உண்டு உறைவிட பள்ளிக்கு ஒரு காப்பாளர் நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கி ணைப்பாளர் சரஸ்ராம் ரவி, கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துள்ளார்.

    ×