என் மலர்
நீங்கள் தேடியது "மது குடிக்க அனுமதி"
- தென்கரை பகுதியில் கடையில் மது குடிக்க அனுமதித்த பெண் கைதானார்.
- அங்கு பதுக்கி வைக்கப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள தென்கரை பகுதியில் பீடா கடையுடன் சேர்த்து சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் முனியம்மாள் (வயது 40). இவர் கடையில், மது குடிக்க அனுமதிப்பதாக வீரகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார், அந்த கடையில் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்படடது. இது தொடர்பாக முனியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.