search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் அகர்கர்"

    • ஹர்திக் பாண்ட்யா விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
    • காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். We want someone who can play a lot without injury.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    டி20-யில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான பிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    ஹர்திக் பாண்ட்யா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் பிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.

    ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

    அதே சமயம் ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்ட்யாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்.

    சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். நீங்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு கேப்டனை விரும்புவது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.

    இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.

    • கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.
    • சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    டி20 உலகக் கோப்பைக்கு இடையே நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சென்றுள்ளனர்.

    இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.

    ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் அஞ்சலி செலுத்தி இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    • கோலி களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
    • கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.

    மும்பை:

    20 ஒவர் உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இது குறித்துதேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-

    விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர். 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக அவர் பராமரித்து வருகிறார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.

    கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் கோலியின் பங்கு முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோலியை அகர்கர் பாராட்டி இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

    • அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர்.
    • ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் உள்ளன. இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஒவ்வொரு அணியும், சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருப்பார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

    குல்தீப் யாதவுடன் ஐ.பி.எல். போட்டியில் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது.

    குல்தீப் யாதவ் எங்களுக்கு (இந்திய அணி) ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். அவரை பெரும்பாலான அணிகள் சவாலாக கருதுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினர்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்.

    இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, "குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாங்கள் நிறைய விஷயங்களை யோசித்தே குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்தோம்.

    உலகக்கோப்பைக்கு முன்னதாக குல்தீப் யாதவை அதிகம் வெளிப்படுத்த விரும்பாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருக்கிறோம்.

    அதனால்தான் அவரை அதிகம் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இரண்டு ஆட்டங்களுக்கு வெளியே அமர்ந்து 3-வது ஆட்டத்தில் விளையாடுவது எங்களுக்கு சிறந்த முடிவாகும்" என்றார்.

    • அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் சேத்தன் ஷர்மா பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் சேத்தனுக்கு பதிலாக அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் தலைமை தேர்வாளருக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர்.

    ஒரு தேர்வாளராக, அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது. தலைமை தேர்வாளர் ஆன பிறகு அஜித் அகர்கர் கூறுகையில், "ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது" என்றார்.

    ×