என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிபி சங்கர் ஜிவால்"
- சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
- அலுவலகத்தின் பார்வையாளர்கள் அறையில் போலீசார், பொதுமக்கள் தங்கள் மனுக்களை என்னிடம் அளிக்கலாம்.
சென்னை:
தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வுபெற்ற நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
டி.ஜி.பி.யாக பதவியேற்றுக்கொண்டபோது, 'ரவுடிகளுக்கு எதிரான, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். போலீசார் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க பல புதிய திட்டம் உள்ளது' என்று சங்கர் ஜிவால் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இதற்கிடையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் மற்றும் போலீசாரின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) தினமும் காலை 11.30 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் பெறுகிறேன். அலுவலகத்தின் பார்வையாளர்கள் அறையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை என்னிடம் அளிக்கலாம். குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) முதல் அவரை பொதுமக்களும், போலீசாரும் சந்தித்து மனு கொடுக்கலாம் என்றும், 2 மாதத்துக்கு ஒருமுறை பொதுமக்களும், போலீசாரும் கொடுத்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையராக நலப்பிரிவின் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகம் முழுவதும் 35 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி.சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராகவும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையராகவும் திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் டி.எஸ்.பி.யாக இருந்த இளங்கோவன் திருவொற்றியூர் உதவி ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார்.
ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டைக்கும் தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராக இருந்த முருகேசன் சென்னை அடையாறுக்கும் தாம்பரம் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சைதாப்பேட்டைக்கும் மாற்றப்படுகிறார்கள்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி சேலையூர் காவல் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.கண்ணன் தமிழக காவல் துறை தொலைத்தொடர்பு பிரிவு டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார் மதுரை நகர திடீர் நகர் உதவி ஆணையராகவும் மாறுதலாகி உள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையராக நலப்பிரிவின் உதவி ஆணையராக மாற்றவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக் முதல்வர் பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பரசன் தஞ்சாவூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி.யாகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூரணி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் டி.எஸ்.பி.யாகவும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த தையல் நாயகி கோவை மாவட்ட மின்பகிர்மான கழக விஜிலென்ஸ் பிரிவு டி.எஸ்.பி.யாகவும் தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக இருந்த ரவி தாம்பரம் காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராகவும், சென்னை காவல் துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மகிமைவீரன் ஆவடி காவல் ஆணையரக மணலி காவல் உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
- அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ம் தேதி நடைபெற்றது.
- கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழக கோயில் வளாகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜகவும், இந்து அமைப்புகளும் முயற்சி செய்தது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இது குறித்து பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேரடி ஒளிரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அதனை நிராகரிக்கக்கூடாது என அன்றைய தினம் உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் பதில் மனு அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு, கோயில் விழா, பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் என அனைத்தும் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் எவ்வித குறுக்கீடுகளும் இன்றி நடைபெற்றன. உள்ளரங்க விழாவாகவும், வெளிப்புற விழாவாகவும் மொத்தம் 252 நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன.
கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும், பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் ஆகியவற்றை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் இந்த முயற்சி தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா தமிழகத்தின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- இ-மெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை :
பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது
இந்நிலையில், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுவும், டி.ஜி.பி சங்கர் ஜிவால் பெயரில் போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் இ-மெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சி மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் 4 ஏடிஎஸ்பி-க்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி சவுந்தரராஜன் நீலகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.