என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரவீன் குமார்"
- இந்தியா இதுவரை 26 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கம் ஆகும்.
அமெரிக்கா வெள்ளிப் பதக்கமும், உஸ்பெகிஸ்தான் வெண்கலமும் வென்றது.
- இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை.
- அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2011 ஒருநாள் உலகக் கோப்பையை எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த உலகக் கோப்பை தனி ஒருவரால் பெற்றதில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை. ஒருவரால் ஒரு போட்டியை வெல்ல முடியாது. அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் ரன்களை எடுத்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகளை எடுத்தார். கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் ரன்களை அடித்தார். டோனி 2011 இறுதிப் போட்டியில் ரன்களை அடித்தார்.
எனவே இது ஒரு அணி வெற்றியாகும். பேட்டர்களில் குறைந்தது மூன்று பேர் ஃபார்மில் இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு பந்து வீச்சாளர்களாவது விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. அது ஒரு டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆக கூட இருக்கலாம். ஒரு வீரரால் உங்கள் போட்டிகளை வெல்ல முடியாது.
இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.
இதே போல ஒருவரால் மட்டுமே வெற்றி கிடைக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர டோனிக்கு எதிரான பல கருத்துக்களை கம்பீர் கூறியுள்ளார்.
- நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை.
- டெல்லி அணிக்காக விளையாட விரும்பினேன்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரரான பிரவீன் குமார், இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் அறிமுகம் செய்யப்பட்டவர். 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை டோனியின் கேப்டன்சியில் ஆடிய வீரர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக கூறி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்களின் மதுப் பழக்கம், ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பாதது, வீரர்கள் நட்புடன் பழகவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இந்நிலையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை லலித் மோடி அழித்து விடுவேன் என மிரட்டியதாக பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் பெங்களூர் எனது இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. மற்றும் உணவு எனக்கு பிடிக்கவில்லை. டெல்லி மீரட்டுக்கு மிக அருகில் உள்ளது. இங்கு இருந்து எனது வீட்டுக்கு செல்ல சுலபமாக இருக்கும்.
ஆனாலும் ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாங்க. அது ஒப்பந்தம் என்று தெரியவில்லை. நான் பெங்களூரு அணிக்கு விளையாட விரும்பவில்லை டெல்லிக்காக விளையாட விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து மிரட்டினார். எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என கூறினார்.
இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.
- இந்திய அணியில் அனைத்து வீரர்களும் குடித்தனர்.
- ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் பிரவீன் குமார். 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய அணி பிரதான பவுலர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவுட் ஸ்விங், இன் ஸ்விங் மூலமாக பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தவர். அவர், 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 112 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ள அவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் அவர் எங்கு எப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இருண்ட ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் முதல்முறையாக இந்திய அணியுடன் இணைந்த போது, சில சீனியர் வீரர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி கொள் என்று அறிவுறுத்தியதோடு, மற்ற சில தவறான பழக்கத்தையும் தவிர்த்துவிடு என்று அட்வைஸ் கொடுத்தார்கள். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் குடித்தனர். ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.
சீனியர் வீரர்கள் பலரும் என்னை இளம் வீரர் என்று சிறப்பாக நடத்தினர். ஆனால் சிலர் மட்டும் என்னை பற்றி தவறான செய்தியை பரப்பினார்கள். கேமராவுக்கு முன்பாக நான் அவரின் பெயரை கூற விரும்பவில்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு ஐபிஎல் அணி ஒன்று என்னை பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட என்னை தேர்வு செய்யவில்லை.
இவையனைத்திற்கும் நான் குடிப்பது தான் காரணமாக அமைந்தது. நான் ஒருநாளும் மைதானத்திலோ அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இதுவே எனக்கு துயரத்தை கொடுத்தது. எனக்கு ஒருவர் கூட அழைத்து பேசாதது தான் சோகமாக இருந்தது.
என்று பிரவீன் குமார் கூறினார்.
- வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
- லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் அவுட் சுவிங், இன் சுவிங் என புது பந்தில் மிரட்டுவார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்.
2011- ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடினார். கடைசியாக 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
இந்நிலையில் மீரட்டில் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்