search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள் உண்ணாவிரதம்"

    • உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் பாண்டிச்சேரி மற்றும் தமிழக வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இன்று கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு திருப்பூர் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மூத்த வக்கீல்கள் கே. என் .சுப்பிரமணியம், பாப்பா மோகன் ,பூபேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    அப்போது மத்திய அரசு மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றனர்.

    உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • முறையாக சட்டம் படித்தவர்களை மட்டும் வழக்கறிஞர்களாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்

    வேலூர்:

    வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

    பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வக்கீல்கள் பாலச்சந்தர் ரவி பாஸ்கரன், உலகநாதன், ராஜ்குமார், காஞ்சனா சுமதி, காலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொழில் செய்யும் இடங்களில் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவதால் அவர்களது உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு இல்லை வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் வழக்கறிஞர்களுடைய சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    வழக்கறிஞர்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் ஜூடிசியல் அக்கவுண்டபிலிட்டி கமிட்டி ஒன்றை உருவாக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொள்வது, முறையாக சட்டம் படித்தவர்களையும் மட்டும் வழக்கறிஞர்களாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் முறையற்ற முறையில் வெளி மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்ததாக கொண்டுவரப்படும் சான்றிதழ் சரி பார்ப்பினை மிகவும் கடுமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×