search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுரிமை"

    • 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை உள்ளாட்சி அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
    • அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பின ரும், மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ராமநாத புரம் நகர்மன்ற 5-வது வார்டு உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சி 5, 6-வது வார்டுகளில் அல்லிக்கண்மாய் பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர் கள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்தனர். அரசு விதிமுறை மற்றும் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் அங்கிருந்து காலி செய்யப் பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களுக்கு மாற்றப்பட்டனர்.

    இவர்களுக்கு ஓட்டுரிமை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரா மநாதபுரம் நகராட்சியில் உள்ளது. ஆனால் இவர்கள் குடியமர்த்தப்பட்டு இருப்பது திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பட்டினம் காத்தான். இத னால் இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை ராமநாதபுரம் நக ராட்சியால் செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேலும் ஓட்டுரிமை நகராட்சியில் இருப்பதால் ஊராட்சி நிர்வாகத்தினரும் தேவையான வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர முடியவில்லை. எனவே அவர்களது ஓட்டுரிமையை ஊராட்சி பகுதிக்கு மாற்றம் செய்து ஊராட்சி நிர் வாகத்தின் சார்பில் அடிப் படை வசதிகளை செய்து தரவேண்டும்.

    மேலும் அவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி, குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி களை செய்துதர வேண்டும். திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் நடவடிக்கையின் பேரில் இந்த குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து குடிசை மாற்று வாரியத்தில் உள்ள 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை அப்பகுதி யில் உள்ள உள்ளாட்சி அமைப்பிற்கு மாற்றம் செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் மனிதர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினாலும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும்.
    • பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், ஜப்பான் எனும் நாடு இல்லாமல் போகலாம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

    டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலக கோடீசுவரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், குறைந்த மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க மக்கள் பல குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்.

    இந்நிலையில், குழந்தை இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் ஒரு டுவிட்டர் பயனர், "குழந்தையில்லாத பெற்றோருக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்தாமல் ஜனநாயகம் நீண்டகாலம் செயல்பட முடியாது" என்று கூறியிருந்தார். அதனை ஆமோதிக்கும் விதமாக, ஆம் என மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.

    இதற்கு முன்பே ஒரு முறை எலான் மஸ்க், "குழந்தை இல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் சிறிய பங்கே உள்ளது. மனித நாகரிகம் எதிர்கொள்ளும் அபாயங்களிலேயே மிகப்பெரிய அபாயம் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது" என்றும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்பிரச்சனை குறித்து 2022ம் ஆண்டு வீடியோ மூலம் ஆல்-இன் உச்சி மாநாட்டில் (All-In Summit) பேசிய அவர் கூறியிருந்ததாவது:

    சிலர் குறைவான குழந்தைகளைப் பெற்றால் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். இது முட்டாள்தனம். நாம் மனிதர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினாலும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் தற்போது இருக்கும் மனித எண்ணிக்கையையாவது நாம் பராமரித்தாக வேண்டும். 'இந்த பயங்கரமான உலகத்திற்கு நான் எப்படி ஒரு குழந்தையை கொண்டு வர முடியும்?' என கூறுவோருக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் வரலாற்றைப் படித்திருக்கிறீர்களா? அப்போது உலகம் இன்னமும் மோசமாக இருந்தது என உணர்வீர்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    ஜப்பானை உதாரணமாக சுட்டிக்காட்டிய மஸ்க், "பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், ஜப்பான் எனும் நாடு இல்லாமல் போகலாம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    எலான் மஸ்க் 3 முறை திருமணமானவர் என்பதும், 9 குழந்தைகளுக்கு தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    ×