search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு ஒத்திகை"

    • ஒத்திகையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • குளத்தில் மூழ்கியவரை மீட்கும் விதம் மற்றும் ஆபத்து காலங்களில் செயல்படும் வழிமுறைகள்

    கன்னியாகுமரி :

    தென்மேற்கு பருவமழை பெய்து வருவதையொட்டி மழை காலங்களில் பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்கும் வகையில் குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் குலசேகரம் அருகே திருநந்திக் கரைக்குளத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மைக்கேல், நிலைய அலுவலர்கள் தனபாலன், செல்வமுருகேசன் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மழை காலங்களில் தண்ணீரில் சிக்கி தத்தளிப்ப வர்களை எவ்வாறு மீட்பது மற்றும் அவர்களுக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிப் பது தொடர்பான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளை குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலைமை தாங்கினார். திப்பிறமலை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா முன்னி லை வகித்தார். இதில் மழை நீரில் இழுத்து செல்பவர்களை காப்பாற்றும் வழிகள், குளத்தில் மூழ்கியவரை மீட்கும் விதம் மற்றும் பல்வேறு ஆபத்து காலங்களில் செயல்படும் வழிமுறைகள் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை குளச்சல் நிலைய அலுவலர் குணசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு பயனடைந்தனர்.

    • வெள்ளத்தில் சிக்கியவர்களை லைப் பாய், ரப்பர் படகு ஆகியவற்றின் மூலம் மீட்பது
    • பொது மக்கள் யாராவது ஆற்றில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது

    கன்னியாகுமரி :

    தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தக்கலையில் நிலைய அலுவலர் தலைமையில் கல்குறிச்சி பச்சைகுளத்தில் மீட்பு ஓத்திகை நடைபெற்றது. இதில் வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை கொண்டு, எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட்டது.

    அதன்படி காலி ரப்பர் குடங்கள், காலி கியாஸ் சிலிண்டர்கள், வாழை தண்டுகள், மூங்கில் கம்புகள், தண்ணீர் பாட்டில்கள், தென்னை குடுவைகள் ஆகியவற்றை கொண்டு வெள்ளத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை லைப் பாய், ரப்பர் படகு ஆகியவற்றின் மூலம் மீட்பது, அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பது ஆகியவை குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குழித்துறை தீயணைப்பு துறை சார்பில் இன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வெள்ளப்பெருக்கின் போது, பொது மக்கள் யாராவது ஆற்றில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது, கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது போன்ற ஒத்திகை பயிற்சிகள் தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது

    ×