search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demand. குடிநீர்"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது.
    • நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பாலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிக்குட்பட்ட 9,10-வது வார்டு பகுதி மேடான இடம் ஆகும். அதிக அழுத்தத்தில் தண்ணீர் வரும் போது குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. பெரியநத்தம், தட்டான்லை பகுதி, காட்டான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது. இதனை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடி க்கை எடுப்ப தில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உடைந்த குழாயை சரிசெய்ய 3 நாட்கள் வரை ஆவதால் குடிநீருக்கு கஷ்டப்படும் நிலை நீடித்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பழைய குழாய்களை அகற்றி விட்டு அனைத்து வார்டுகளிலும் தரமான குடிநீர் குழாய்கள் மற்றும் பழவேலி பாலாற்று பகுதியில் உள்ள நீர் இறைக்கும் எந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×