search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடத்தின்"

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பல் வேறு துறைகள் சார்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்கு டன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை பொதுப் பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (கிராம ஊராட்சிகள்) உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×