search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ச்சிப்பு"

    • கோட்டார் பிஷப் நசரேன் சூசை பங்கேற்பு
    • ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவை மற்றும் பங்குத்தந்தையர்கள் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கோடிமுனை புனித பர்த்த லோமையார் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா நேற்று மாலை நடந்தது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை 6.15 மணிக்கு தற்காலிக ஆலயத்தில் வைத்து திருப்பலி நடந்தது. 10 மணிக்கு பால் காய்த்தல், மாலை 5 மணிக்கு கொடி மரம் அர்ச்சிப்பு மற்றும் கொடியேற்றுதல் நடந்தது.தொடர்ந்து புதிய ஆலயம் அர்ச்சிப்பு நடந்தது.

    புதிய ஆலயத்தை கோட்டார் பிஷப் நசரேன் சூசை அர்ச்சித்து தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். அனைத்து பக்த சபை இயக்கங்கள், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள், திருவழி பாட்டுக்குழு, பீடச்சிறார்கள் மற்றும் பாடகர் குழுவினர் சிறப்பித்தனர். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கோடிமுனை துணைத்தலைவர் சார்லஸ், செயலாளர் விஜயராணி, உதவி செயலாளர் ஜார்ஜ், பொருளாளர் சுரேஷ் மற்றும் அருட்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து குடும்ப பங்கு விழா தொடங்கியது.

    இரவு 8 மணியளவில் அன்பின் விருந்து நடந்தது.இன்று 2-ம் நாள் முதல் 8-ம் நாள்வரை தினமும் காலை திருப்பலி, ஜெப மாலை மற்றும் திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 3-ம் நாள் காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. 9-ம் நாள் காலை 6.15 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு, 10 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது.

    10-ம் நாள் காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.பங்கு பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழுவினர் சிறப்பிக்கின்றனர்.இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.

    ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவை மற்றும் பங்குத்தந்தையர்கள் செய்து வருகின்றனர்

    ×