search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறை தீவிரம்"

    • 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைத்து தேடினர்
    • ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டன

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் சிற்றாறு வனப்பகுதி அருகே புலி நடமாட்டம் இருப்பதாக குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜாவின் உத்தரவின் பேரில் களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர்.

    அப்போது மல்லமுத்தன்கரை என்ற இடத்தில் ஒரு புதர் பகுதியில் ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புலியின் காலடி தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில் அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் விஷேச காமிரா பொருத்தும் பணிகள் வனத்துறை சார்பில் சுமார் 10 இடங்களில் நடந்தது. தொடர்ந்து இரவு பகலாக வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று இரவு பழங்குடி மக்கள் குடியிருந்த பகுதியில் இருந்த பசு மாட்டை புலி கடித்தது. புலியின் சத்தம் கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் கம்பு, ஆயுதங்களுடன் வெளியே வந்தார்கள். அதற்குள் புலி சென்று விட்டது. பசு மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்து அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். புலியின் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தற்போது அந்த பகுதி முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிரா மாட்டி கண்காணித்து வருகின்றனர்.

    ×