என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலஅதிர்வு"
- கிருஷ்ணகிரியில் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
- நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிற்பகல் 1.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
- வீடுகளில் இருந்த பொருட்கள், பீரோ ஆகியவை நகர்ந்ததாக தெரிவித்தனர்.
- பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த சத்தத்துடன் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதில் நில அதிர்வு ஏற்பட்டபோது கடையின் ஷட்டர், தகரம் சீட்டுகள் குலுங்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
திருப்பூர் காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்ட போது பல்வேறு வீடுகளில் பொருட்கள் நகர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் தங்களது பகுதியில் பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு, இயற்கையாகவே ஏற்பட்ட நில அதிர்வா? இல்லை கல்குவாரியில் பாறைகளை பெயர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடிச்சத்தமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.
இதேப்போல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று மாலை ஊரே குலுங்கும் வகையில் அதி பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தமானது சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உணர முடிந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள், பீரோ ஆகியவை நகர்ந்ததாக தெரிவித்தனர்.
இந்த வெடி சத்தமானது வானில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதால் ஏற்பட்ட சத்தமா? அல்லது தாராபுரம் அருகே புகளூர் பவர் கிரிட் நிறுவனத்தில் அதிக சக்தி கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்களில் மின் அழுத்தத்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்குமா? அல்லது நில அதிர்வு காரணமா? என ஒருவருக்கு ஒருவர் செல்போன் மூலம் விசாரித்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் துறை, வருவாய் துறை சார்பில் முறையான விளக்கம் பொது மக்களுக்கு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பயங்கர சத்தம் கேட்டதும் தாராபுரம் நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த பொது மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் ஓடி வந்தனர். தாராபுரம், மூலனூர், குண்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இரவு முழுவதும் பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர் .
இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,
தாராபுரம் நகர் பகுதியில் வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயங்கரமான வெடிசத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் மூன்று முறை தொடர்ச்சியாக கேட்டது. ஒரு நிமிடங்கள் வரை சத்தம் நீடித்தது.
இதுகுறித்து வெளியில் வந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்களும் வெடிச்சத்தம் கேட்டது என தெரிவித்தனர். அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்களுக்கு எதனால் வெடிச்சத்தம் ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
மீண்டும் வெடிச்சத்தம் கேட்குமோ? என பயத்தில் உள்ளோம். இதய நோயாளிகள், பலவீனமானவர்கள் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த வெடிச்சத்தம் பாதிப்பை ஏற்படுத்துமோ? என அச்சமாக உள்ளது. இரவில் நிலநடுக்கம் அல்லது கல் குவாரிகளில் ஆழ்துளையிட்டு வெடி வைக்கிறார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா என அதிகாரிகள் விசாரித்து பொதுமக்களின் பதட்டத்தை போக்க வேண்டும். புவியியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாநகர் மற்றும் தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட பயங்கர சத்தம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சூலூர் விமான படை தளத்தில் இருந்து பறக்கும் போர் விமானங்களால் அவ்வப்போது பயங்கர சத்தம் கேட்டது. நேற்று ஏற்பட்ட சத்தம் போர் விமானங்களால் ஏற்படவில்லை. எனவே அது குறித்து இன்று ஆய்வு செய்கிறோம். நில அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சத்தத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 2ஆக பதிவாகி உள்ளது. எனவே நில அதிர்வு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர்.
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- முன்னதாக இன்று காலை கேரளாவின் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இத்துறவி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதிகளில் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக இன்று காலை கேரளாவின் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாகப் பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அம்சபாவிதம் தவிர்க்கப்பட்டது.
- நேற்று அதிகாலை முதல் காலை வரை 4 முறை நிலஅதிர்வு
- ரிக்டர் அளவில் 4.2, 2.7, 2.8 எனப் பதிவு
இந்தியாவின் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை உத்தரகாண்டில் நான்கு முறை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
முதல் நிலஅதிர்வு நேற்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1.37, 2.18, 6.52 என மூன்று முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
2, 3 மற்றும் 4-வது நில அதிர்வு 2.7 மற்றும் 2.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் பிதோராகார்ஹ் மாவட்டத்தை சுற்றி நிகழ்ந்துள்ளது.
இந்தியா- சீனா எலலையில் மிலம் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நில அதிர்வை உணர்ந்ததாக, ராங்கோங்கில் உள்ள பூபால் சிங் தெரிவித்தார்.
- நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 2-வது முறையாக ஏற்பட்ட நில அதிர்வில் பொன்னுக்கரை நேதாஜி வீதியில் உள்ள இரு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. திருக்கூர், அழகப்பநகர், வரந்தரப்பள்ளி, புதுக்காடு, நென்மணிகரை ஆகிய ஊராட்சிகளில் பல இடங்களில் நிலஅதிர்வும், வெடிச்சத்தமும் ஏற்பட்டது.
இந்நிலையில் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பல இடங்களில் நில அதிர்வு மற்றும் வெடி சத்தம் ஏற்பட்டது. கடந்த 2 முறை நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில், நேற்று அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நில அதிர்வால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்