search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி விற்பனை தொடங்கியது"

    • ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஜவுளி மார்க்கெட்டில் சீசன் தொடங்கி உள்ளது.
    • ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கமாகும்.

    கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபா ரிகள், உள்ளூர் சில்லரை வியாபா ரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆடிப்பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் விற்பனை தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:

    ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. ஆடி மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜவுளி மார்க்கெட்டில் சீசன் தொடங்கி உள்ளது.

    குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.

    வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது. அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் முழுமையாக வரும்.

    இவ்வாறு அவர் கூறினர். 

    ×