search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக்ரான்"

    • ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.
    • 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்

    இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர் தனது 100-வது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீன்ஸ்வெர்லினை கரம் பிடித்துள்ளார்.

    பிரான்ஸ்சில் நார்மாண்டி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர், ஹரால்டு டெரன்ஸ்-ஜீன்ஸ்வெர்லின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சில பயனர்கள், இந்த வயதில் இது தேவையா? என பதிவிட்டனர்.

    அதற்கு ஜீன் பதில் அளிக்கையில் காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கும் அந்த உணர்வு உண்டு என்றார். இந்நிலையில் ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார். 

    • மேற்கத்திய துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதை புறந்தள்ளி விட முடியாது- மேக்ரான்
    • பிரான்ஸ் முடிவு தனக்குத்தானே பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதாகும்- ரஷிய மந்திரி

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.

    குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகின்றன. ஆயுதங்கள் கொடுத்து பக்கபலமாக இருந்து வருகின்றன.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதை புறந்தள்ளி விட முடியாது என தெரிவித்திருந்தார். இதன்மூலம் தேவைப்பட்டால் பிரான்ஸ் உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்கெய் சோய்கு, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி செபஸ்டியன் லெகோர்னு உடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.

    அப்போது செர்கெய் "பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஏற்கனவே அறிவித்தபடி, பிரான்ஸ் அதை பின்பற்றினால், அது பிரான்ஸ் தனக்குத்தானே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வதாகும்" என செபஸ்டியன் லெகோர்னுவிடம் எச்சரித்துள்ளார்.

    மேலும், "உக்ரைன் மேற்கத்திய நாடுகளில் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை. பிரான்ஸ் சிறப்பு துறைககள் ஈடுபடாது என நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷியா உடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ள  நிலையில் ரஷிய பாதுகாப்பு மந்திரி அரிதாக பிரான்ஸ் மந்திரியுடன் பேசியுள்ளார்.

    2022 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு மந்திரிகளும் முதன்முறையாக தற்போது பேசியுள்ளனர்.

    • குடியரசு தினவிழா முன்னிட்டு ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன.
    • பிரான்ஸ் படைவீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

    இந்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியும் மரியாதை செலுத்தினார். தலைமை சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்து கொண்டார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்ற பிறகு, கண்கவர் அணிவகுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்ள புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு

    ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்டிர பவனில் இருந்து புறப்பட்டார். அவருடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடனிருந்தார்.

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்டு இந்திய இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தினார்கள்.

    தேசியக்கொடியை பறக்கவிட்டபடி Mi-17IV ஹெலிகாப்டர்

    நான்கு Mi-17IV ஹெலிகாப்டர்கள் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு வானில் சென்றன.

    சக்ரா விருதுகள் வாங்கிய அதிகாரிகள் அணிவகுப்பு

    மிக உயர்ந்த வீர வீருதுகளான பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்ற அதிகாரிகள் அணிவகுபபு நடைபெற்றது.

    குதிரைப்படை அணிவகுப்பு

    பிரான்ஸ் வீரர்கள் அணிவகுப்பு

    டி-90 பீஷ்மா டாங்கிகள் அணிவகுப்பு

    பாதுகாப்புப்படையின் அனைத்து வாகனங்களின் அணிவகுப்பு

    பீரங்கி படைப்பிரிவின் பினாகா படைப்பிரிவின் அணிவகுப்பு

    பழமையான காலாட்படையின் மெட்ராஸ் படைப்பிரிவின் அணிவகுப்பு

    முப்படையில் உள்ள வீராங்கனைகளின் அணிவகுப்பு

    ஆயுதப்படை மருத்துவக்குழுவின் அனைத்து பெண்கள் பிரிவு அணிவகுப்பு

    இந்திய விமானப்படை அணிவகுப்பு

    முதன்முறையாக இடம்பெற்ற பெண்கள் பாதுகாப்புப்படையின் இசைக்குழு

    இந்திய விமாப்படையின் சிறப்பை விளக்கும் காட்சி வீடியோ

    டெல்லி பெண் போலீசின் இசைக்குழு முதன்முறையாக பங்கேற்றது

    பெண் அதிகாரித்தை பிரதிபலிக்கும் வகையில் பெண் வீராங்கனைகளின் அணிவகுப்பு

    • 21 பீரங்கி குண்டு முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி.
    • முப்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

    இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க கொடியேற்றிய நிலையில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    முன்னதாக கொடியேற்றும் இடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் வருகைத் தந்தார். அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தலைமை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

    • பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடையும் மேக்ரான் பல இடங்களை சுற்றி பார்க்க இருக்கிறார்.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில், இன்று இந்தியா வருகிறார்.

    பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைகிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ரோடுஷோவில் கலந்து கொள்கிறார். இருவரும் இணைந்து சில வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை பார்வையிட இருக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இமானுவேல் மேக்ரான் பார்வையிட இருக்கிறார். அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வையும் பார்த்து ரசிக்க உள்ளார்.

    டெல்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் சங்கானேரி வாசல் வரை மோடி மற்றும் மேக்ரான் ரோடுஷோ நடத்த உள்ளனர்.

    ராம்பேக் அரண்மனையில் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் மேக்ரான் இந்தியா வர இருக்கிறார்.

    இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி நேற்று அதிபர் மேக்ரான் அளித்த விருந்தில் கலந்து கொண்டார்
    • பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது வழங்கு கவுரவம்

    இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பங்கேற்றார். பிரான்சில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்தார். அந்நாட்டு பிரதமர், செனட்சபை தலைவர் ஆகியோரையும் சந்தித்தார்.

    இன்று பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மேக்ரான் ''உண்மை மற்றும் நட்பால் உருவான 25 வருட மூலோபாய நட்புறவை இந்தியா- பிரான்ஸ் கொண்டாடி வருகிறது. தற்போது அது இன்னும் வலிமையாவதற்கான நேரம் இது. அன்புற்குரிய மோடி, பாரீஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

    ×