என் மலர்
நீங்கள் தேடியது "ஒவைசி"
- இந்தியர்கள் இந்தியர்களுடன் சண்டையிடும்போது நமது எதிரிகள் பயனடைவார்கள்.
- டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்தை எட்டுவதுதான் இந்தியாவின் இலக்காக இருந்ததா?
பாகிஸ்தான் - இந்தியா சண்டை ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்த நிலையில் இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாகிஸ்தான் தனது பிரதேசத்தை இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்திற்காகப் பயன்படுத்தும் வரை, நிரந்தர அமைதி இருக்காது. போர் நிறுத்தம் அல்லது போர் நிறுத்தம் இல்லை பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் அடையாளம் காண வேண்டும்.
ஆக்கிரமிப்புக்கு எதிராக நான் எப்போதும் அரசாங்கத்திற்கும் ராணுவத்துக்கும் ஆதரவாக இருந்து வருகிறேன். இது தொடரும்.
ராணுவத்தின் துணிச்சலுக்கும் அவர்களின் பாராட்டத்தக்கத் திறமைக்கும் நான் நன்றி கூறுகிறேன். ராணுவ வீரர் எம் முரளி நாயக், ஏடிடிசி ராஜ் குமார் தாபா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். மேலும் மோதலின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அனைத்து பொதுமக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.
இந்த போர் நிறுத்தம் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த இரண்டு வாரங்களில் நடந்தவற்றிலிருந்து இந்தியர்களும் அரசியல் கட்சிகளும் நிறைய கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தியா ஒன்றுபட்டால் வலிமையானது. இந்தியர்கள் இந்தியர்களுடன் சண்டையிடும்போது நமது எதிரிகள் பயனடைவார்கள்.
எனக்கு சில கேள்விகள் உள்ளன, அரசாங்கம் அதை தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்:
1. ஒரு வெளிநாட்டு நாட்டின் அதிபர் (டிரம்ப்) அறிவிப்பதை விட நமது பிரதமர் நரேந்திர மோடி போர் நிறுத்தத்தை அறிவித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
1972 இந்தோ பாக் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது முதல் முதல் மூன்றாம் தரப்பு தலையீட்டை நாம் எப்போதும் எதிர்க்கிறோம். இப்போது மட்டும் ஏன் அதை ஏற்றுக்கொண்டோம்? காஷ்மீர் பிரச்சினை சர்வதேசியமாக்கப்படாது என்று நம்புகிறேன், ஏனெனில் அது எங்கள் உள்நாட்டு விஷயம்.
2. நடுநிலையான பிரதேசத்தில் பேசுவதற்கு நாம் ஏன் ஒப்புக்கொள்கிறோம்? இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்னவாக இருக்கும்? பாகிஸ்தான் தனது பிரதேசத்தை பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கிறதா?
3. எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதிலிருந்து பாகிஸ்தானைத் தடுக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்தை எட்டுவது இந்தியாவின் இலக்காக இருந்ததா அல்லது பாகிஸ்தானை மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலைக் கனவு கூட காணாத நிலைக்குக் கொண்டு வருவது இந்தியாவின் இலக்காக இருந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டும்.
- பயங்கரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும்,எம்.பி.யுமான ஒவைசி பாராட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய ஒவைசி, "பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும் என்பது அவசியம். மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.
- பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி.
மகாராஷ்டிரா மாநிலம் பிரபானியில் வக்பு திருத்தம் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவரும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது :-
பாகிஸ்தான் தலைவர்களின் அச்சுறுத்தல்களால் எதுவும் செய்து விட முடியாது. "நீங்கள் அரை மணி நேரம் பின்தங்கியிருக்கவில்லை, இந்தியாவை விட அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கிறீர்கள். பாகிஸ்தான் நாட்டின் மொத்த பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டுக்கு கூட சமமாக இல்லை.
"பாகிஸ்தான் தங்களிடம் அணுகுண்டுகள் இருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்கிறது. வேறொரு நாட்டிற்குள் சென்று அப்பாவி மக்களைக் கொன்றால், எந்த நாடும் அமைதியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொல்வதற்கு முன்பு பயங்கரவாதிகள் அவர்களின் மதத்தைக் கேட்டிருக்கிறார்கள் "நீங்கள் எந்த மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவர்கள். இந்தச் செயல் நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் வாரிசுகள் என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவை குறிவைத்து பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது. மேலும், சர்வதேச சட்டம் இந்தியா பாகிஸ்தானின் விமானப்படையை முற்றுகையிட அனுமதிக்கிறது.
பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் போலவே காஷ்மீரிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்தவர்கள். "சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.
பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி. காயமடைந்த குழந்தையை முதுகில் சுமந்து 40 நிமிடங்கள் நடந்து சென்று உயிரைக் காப்பாற்றியவவர் ஒரு காஷ்மீரி.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்போது காஷ்மீரியும் இந்தியாவின் ஒரு பகுதிதான்.
வக்பு திருத்தம் சட்டம் குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்த போராட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.
- முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது
- பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.
பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் நேற்று பேசும் போது வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்களுக்கு 50 சதவீத தேர்தலில் போடடியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் "வக்பு சொத்துகளை நேர்மையாக பயன்படுத்தி இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது" என்ற பிரதமர் மோடியின் பேசியிருந்தார்.
பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.
அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த மோடியின் கருத்துக்கு அகில இந்தய மஜ்லீஸ் தலைவர் (AIMIM) ஓவைசி கூறும் போது, "ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தையும், வளங்களையும் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தி இருந்தால் பிரதமர் தனது குழந்தைப் பருவத்தில் தேநீர் விற்க வேண்டிய அவசியமில்லை. மோடியின் வக்பு திருத்த சட்டம் அவற்றை மேலும் பலவீனப்படுத்தும்" என்றார்.
- அசாமில் காய்கறி விலை உயர மியா வியாபாரிகள்தான் காரணம் என அம்மாநில முதல்வர் விமர்சனம்
- எதற்கெடுத்தாலும் அவர்களை குறை கூறுவதா? என ஒவைசி கடும் விமர்சனம்
தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய மழைக்கு முன்பதாக அசாம் மாநிலத்தில் பேய்மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் தஞ்சமடைந்தனர்.
மழை காரணமாக காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து புலம்பெயர்ந்து அசாமில் குடியேறிய முஸ்லிம்கள் மியா என்று உள்ளூரில் மொழியில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ''காய்கறிகளை இவ்வளவு விலைக்கு உயர்த்தியது யார்? காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் மியா வியாபாரிகள். அசாம் மாநில மக்கள் காய்கறிகள் விற்பனை செய்திருந்தால், அவர்கள் விலைவாசியை உயர்த்தியிருக்க மாட்டார்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அடிக்க மியா சமூகத்தினரை வகுப்புவாத அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறார். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள், அசாம் மக்களுடைய கலாசாரம், மொழியை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
ஹிமாந்தா பிஸ்மா சர்மாவின் மியா குறித்த கருத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்வினையாற்றியுள்ளார்.
அவர் பதவிட்டுள்ள டுவிட்டரில் ''அசாமில் சில குரூப்புகள் உள்ளன. அவர்களின் வீட்டு எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும், கோழி முட்டையிட வில்லை என்றாலும், மியா (முஸ்லிம்கள்) மீதுதான் குற்றம்சாட்டுவார்கள். ஒருவேளை அவர்களுடைய தனிப்பட்ட தோல்விகளால் இதுபோன்று குற்றம் சாட்டலாம்'' என்றார்.
வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கும் மோடிக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருக்கும் என பா.ஜனதாவினர் கூறி வரும் நிலையில், தற்போதைய நிலையில் அவர்களிடம் தக்காளி, கீரை, உருளைக்கிழக்கு உள்ளிட்டவைகள் கேட்டு நிர்வகிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் நாட்டிற்கு மோடி பயணம் செய்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜனதாவுடன் கைக்கோர்த்த தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உள்ளனர்
- காங்கிரசை கடும் விமர்சனம் செய்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு
கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டாலும் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. கர்நாடகாவில் உள்ள குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுக்கு அழைப்பு இல்லை.
அழைக்கப்படாதது குறித்து ஒவைசி கட்சியின் செய்தி தொடரபாளர் வரிஸ் பதான் கூறுகையில் ''அவர்கள் எங்களை அழைக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் அரசியல் திண்டத்தகாதவர்கள். நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி உள்ளிட்ட அங்கிருக்கும் தலைவர்கள் பா.ஜனதாவுடன் ஏற்கனவே கைக்கோர்த்தவர்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சட்டசபை தேர்தலின்போது காங்கிரசை கடும் விமர்சனம் செய்தார். அவரும் அங்கே உட்கார்ந்து இருப்பதை நாம் பார்த்தோம். நாங்கள் 2024-ல் மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். ஆனால், ஒவைசி மற்றும் எங்கள் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
- மோடி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான சதி- அமித் ஷா
- வீடியோ வைரல் ஆன பின்னர்தான், நடவடிக்கை- ஒவைசி
மணிப்பூரில் இரு பிரிவனருக்கு இடையிலான மோதல், கடந்த மே மாதம் 3-ந்தேதி வன்முறையாக வெடித்தது. அதில் இருந்து தற்போது வரை அங்கு அமைதி திரும்பவில்லை. இதற்கிடையில் கடந்த வாரம் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியானது. காட்டுமிராண்டித்தனமான இந்த செயலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டன குரல் எழும்பியது.
இந்த விசயத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தனர்.
இதங்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பாக பேசிய அமித் ஷா ''பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் ''மணிப்பூர் வீடியோ, மோடி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்டது சதியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து வன்முறை நடைபெற்று வருகிறது. வீடியோ சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய வீடியோ. ஆனால், வீடியோ வைரல் ஆன பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோடி அரசு எப்போதுமே அவர்களுடைய இமேஜ் குறித்துதான் கவலைப்படுகிறது. குகி பெண்களின் கண்ணியத்தை பற்றியல்ல. என்ன ஒரு வெட்கக்கேடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக,
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதற்கிடையே 2 பெண்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின்போது, மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணிப்பூரில் மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மைதேயி இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய செல்போன் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அந்த விசாரணைகளில் என்னென்ன நடந்தது என்பது தெரிய தொடங்கி இருக்கிறது. குகி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சியை பதிவு செய்தவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்துள்ளனர். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பது முதல் கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த 7 வழக்குகள் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். விசாரணை முடிவில் நிச்சயம் உண்மை தெரியும். விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
எனவேதான் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். சி.பி.ஐ. விசாரிப்பது போல மணிப்பூர் கலவரத்தின் 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான காட்சிகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குகிறார்கள். மேலும் மணிப்பூர் மாநில அரசு செயல் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் மே 4-ந்தேதி 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி அழைத்து செல்லப்பட்டபோது அங்கு ராணுவமோ, உள்ளூர் போலீசாரோ இல்லை. சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கு இதுவரை 12 தடவைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரு இனத்தவர்களின் வாழ்விடங்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமரச முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் சட்டம் ஒழுங்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மணிப்பூரில் நாங்கள் முழுமையாக அமைதி ஏற்படுத்தி வருகிறோம். 16 மாவட்டங்களில் தலா ஒரு படை வீதம் 16 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.
மணிப்பூரில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் இடையூறு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். 82 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய, மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி அமைதியாக நடந்தன. 90 சதவீதம் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விரைவில் மணிப்பூர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மணிப்பூரில் வன்முறை ஏற்படுவதற்கு அம்மாநில ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட மைதேயி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கலாம் என்ற தீர்ப்புதான் காரணமாகி விட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும். மேலும் மணிப்பூரில் நாங்கள் ஆயுத சட்டத்தை திரும்ப பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வருபவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வருகிற டிசம்பர் மாதம் இது தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இல்லாதவர்கள் இந்திய குடியுரிமை அடையாள அட்டை பெற இயலாது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடப்பது போல காங்கிரசார் பிரசாரம் செய்கிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 1993, 1995, 1997, 1998 ஆண்டுகளில் 4 தடவை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை கேட்பதற்கு முன் வருவது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 14 நாட்கள் கழித்துதான் துணை நிலை ராணுவத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்கிறோம்.
இதன் மூலம் வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியின்போது மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 149 நாட்கள் தொடர்ந்து அந்த மாநிலத்துக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.1900-த்துக்கும் விற்பனை ஆனது.
ஆனால் நாங்கள் அத்தியாவசிய பணிகள் அனைத்தையும் சீராக வைத்திருக்கிறோம். மணிப்பூருக்கு இப்போதும் யாரும் சென்று வரலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். ராகுல்காந்தி சென்றபோது ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால் அவர் தடுக்கப்பட்டார். அது அவருக்கே தெரியும். தற்போது மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
- பாலஸ்தீன பிரச்னை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரச்சனை.
- காசாவின் ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 'பேய்' என்று ஏ.ஐ.எம் ஐ.எம் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
பாலஸ்தீன பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரசனை. எனவே, காசா மக்களுக்கு ஆதரவாக ஒற்றுமை காட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். நெதன்யாகு ஒரு பேய், கொடுங்கோலன், போர்க் குற்றவாளி. காசாவில் 10 லட்சம் பேர் வீட்டை இழந்துள்ளனர்.
உலகமே இதைப் பார்த்து மவுனம் காக்கிறது. காசாவின் இந்த ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமான தகவல் வெளியிடுகின்றனர்.
கடந்த 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை.
- 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.
திருப்பதி:
ஐதராபாத் எம்.பி ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
ஒவைசி பா.ஜ.க.வின் பி டீம் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர் நிறுத்தப்படுவார் இதன் மூலம் பா.ஜ.க எளிதில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்து ஒவைசி, கூறுகையில் :-
ராகுலுக்கு அம்னீசியா என்ற அரசியல் மறதி நோய் உள்ளது. அவர் எளிதில் மறந்து விடுவார். நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கிஷன் ரெட்டி வெற்றி பெற்றார்.
இதில் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததா? 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.
ஆனால் அமேதியில் போட்டியிடவில்லை. அமேதியில் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அங்கு ஸ்மிருதி ராணியிடம் ராகுல் பணம் வாங்கினாரா? குஜராத்தில் பா.ஜ.க ஏன் வெற்றி பெறுகிறது. எவ்வளவு பணம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
- ஒவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
- தேசிய தலைவர் அஷ்ஸாதுதின் ஒவைசி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக வக்கீல் அகமது தெரிவித்து உள்ளார்.
சென்னை:
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம். ஐ.எம்.) தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
திருப்பத்தூரில் தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அந்த கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
அக்கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஸாதுதின் ஒவைசி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக வக்கீல் அகமது தெரிவித்து உள்ளார்.
- டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
- ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் மாதவி லதா பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஒவைசியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சைவார்த்தை நடத்தி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான முகமது பெரோஸ் கான் கூறுகையில்:-
காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால் ஒவைசியுடன் நட்பு கொள்ள தயார் என மறைமுகமாக கூட்டணி குறித்து தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோல்வி அடைய செய்ய எந்த கூட்டணிக்கும் தயார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- 1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது
- ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்
1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.
நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்
இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.