என் மலர்
நீங்கள் தேடியது "கோட்டை முத்துமாரியம்மன் கோவில்"
- கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- சாமகொடை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகில் கச்சேரி காம்பவுண்ட் வளாகத்தில் மருத்துவ சமுதா யத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டை மாடன், கோட்டை மாடத்தி மற்றும் கோட்டை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று கணபதிஹோமம், பால்குடம் ஊர்வலம், பிற்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் மதியம் அன்ன தானம், மாலையில் பொங்க லிடுதல் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் தலைமையில், தலைவர் கருப்பையா, செயலாளர் செல்வா, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.