என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அலங்கார தரை கற்கள்"
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
- புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் அலங்கார தரை கற்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத்திடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து கொட்டாரம் பெருமாள்புரத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், கொட்டாரம் பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருமாள்புரம் கிளை அ.தி.மு.க. செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஷ், ஊர்த்தலைவர் சுடலைமணி,செயலாளர் சந்திரகுமார், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கமால், கொட்டாரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் தங்ககுமார், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதாபாஸ்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சம்பூர்ண தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் கடும் அவதி
- நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.
பாலவிளை, ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலகங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள். இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்களோ, பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர்.
மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்கு ள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம டைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்கபடாமல் கிடந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும், இல்லை என்றால் தான் தீக்குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் அந்த சாலை சீரமைக்க படாத நிலையே கிடந்துள்ளது. சாலை சீரமைக்கபடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாதவாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர்.
மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ங்களும் பொதுமக்களும் 2 கிலோமீட்டர் சுற்றி மாற்று பாதை வழியாக சென்று வந்தனர். மேலும் குழித்துறை நகராட்சி நிர்வாகமும் அந்த வார்டு கவுன்சிலரும் சேர்ந்து இந்த சாலை பணியில் பல முறைகேடுகள் செய்ததாக ஊர் மக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சூழலில் அந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டு மெதுவாக செய்யப்பட்டு வருகிறது. பாலவிளை ஈத்தவிளை சாலை ½ கிலோமீட்டர் தான் உள்ளது. இந்த தூரத்தில் உள்ள சாலை பணியை செய்ய 5 நாட்களே போதுமானது. ஆனால் நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.
மேலம் 2 மாதங்களாக மாற்று பாதை வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளா கியுள் னர். மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பால விளை ஈத்த விளை சாலையில் அலங்கார கற்கள் பதித்தது. அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாதவாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப் பட்டுள்ளது. ஆகவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைபணியை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொது மக்களும் மாணவ மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்