search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் தீ வைப்பு"

    • ஓட்டலில் இருந்த பிரிட்ஜ், குளிர்பானங்கள், அடுப்பு உள்ளிட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒட்டலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி அடுத்துள்ள ராஜபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 44). தி.மு.க. கிளைச்செயலாளரான இவர் ராஜபுதூர் மெயின் ரோட்டில் ஓலை செட்டால் ஆன ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் ஒட்டலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். தீ மள, மளவென பற்றி எரிந்தது. இதைப்பார்த்த ஜெயக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை தண்ணீர் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.

    ஆனால் தீயினால் ஓட்டல் முழுவதும் கருகியது. மேலும் ஓட்டலில் இருந்த பிரிட்ஜ், குளிர்பானங்கள், அடுப்பு உள்ளிட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி. ராஜன், தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ், நகராட்சி கவுன்சிலர் ஜின்னா, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், கட்டளை கருணாகரன், மாவட்ட பிரதிநிதிகள் கோபால் பாண்டியன், ஜான் பால், ஒன்றிய அவைத்தலைவர் தங்க பாண்டியன், கிளைச் செயலாளர் வைகுண்ட ராஜன், சண்முகம் உள்பட தி.மு.க.வினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் நாசமான ஓட்டலை பார்வையிட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒட்டலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×