என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேவை பாதிப்பு"
- எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது.
- எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்பு.
எச்.டி.எப்.சி வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் சேவை பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்களுக்கு தலா இரண்டு மணி நேரத்திற்கு யுபிஐ உள்ளிட்ட சேவைகள் இயங்காது என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு காலத்தில் எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரூபே (Rupay) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் அப் பே, பேடிஎம், மொபிக்கிவிக் உள்ளிட்ட சேவைகளும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பராமரிப்புப் பணியின்போது எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
- ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் சேனலின் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.
- விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை:
சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் நிம்மதியுடன் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விம்கோ நகர் மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோநகர் டெப்போ நிலையம் இடையே மின்வினியோகத்தில் தடை ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் தான் கடைசியாகும். திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.
இதனால் விம்கோ நகர் பணிமனை நிலையம்-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. மற்றொரு பாதையில் சேவை நடைபெறாது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது. 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.
மெட்ரோ ரெயில்கள் காலை அலுவலக நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவை வீதம் இயக்கப்படும். ஆனால் மின்சார தொழில் நுட்ப கோளாறால் குறைந்த அளவில் அதிக இடை வெளியில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
விம்கோ நகர் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர், தேரடி, காலடிப்பேட்டை சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதனால் வட சென்னை பகுதியில் இருந்து சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் மற்றும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதற்கிடையில் மின் வினியோக கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் அதனை சரி செய்து இயல்பான சேவையை தொடங்க 4 மணி நேரம் நீடித்தது. காலை 9.30 மணி முதல் போக்குவரத்து சீரானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்