என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராகுல்"
- "சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை" என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.
- இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் "சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை" என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.
பான் இந்தியன் படமாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது. முன்னதாக விஜய் தேவரகொண்டாவை வைத்து, டியர் காம்ரேட், குஷி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
விஜய் தேவரகொண்டா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.. சூப்பர் ஹிட்டான டாக்ஸிவாலா படத்திற்கு பிறகு விஜய் மற்றும் ராகுல் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.
ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.
இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
- இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதப்பட்டார்.
ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உத்தரபிரதே சத்தில் குறைய தொடங்கியது.
காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிந்தது. இந்த நிலையில் பிரியங்கா மீண்டும் உத்தர பிரதேசம் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்த முறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகிவிட்டார். இத னால் பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.
இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல்காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரசுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.
உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்த முறையை போல் அவர் போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்பு உள்ளது.
உத்தரபிரதேசத்தின் 80 பாராளுமன்ற தொகுதி களில் 17 தொகுதிகளை பெற்று சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
- போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கிறது.
- காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:
தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் காரசாரமாக மோதிக் கொள்வது வாடிக்கையானதுதான்.
அந்த வகையில் 5 மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவும், காங்கிரசும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அதில் 'மிகப்பெரிய பொய்யர்' என குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜூம்லா பாய் என்றும் விரைவில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பார்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலடியாக பா.ஜனதா சார்பில் ராகுல் படத்தை 10 தலைகளுடன் வெளியிட்டு ராவணன் என்று குறிப்பிட்டனர். இந்த இரு படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக பா.ஜனதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டது. உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.
சென்னையில் தி.நகரில் பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கிறது.
காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு- கார்கே
- நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம்- ராகுல் காந்தி
கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில் ''நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு'' என்றார்.
ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ''இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்