என் மலர்
நீங்கள் தேடியது "சென்னிமலை முருகனுக்கு"
- சென்னிமலை முருகன் கோவிலில் பூணூல் அணிவிக்கப்பட்டது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
ஆவணி அவிட்டம் விழா வினை முன்னிட்டு சென்னி மலை முருகப் பெருமானுக்கு பூணூல் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆவணி பவுர்ணமியினை முன்னிட்டு ஆவணி அவிட்ட விழா கொண்டாடப்பட்டது.
சென்னிமலை முருகன் கோவிலில் நடந்த விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர், உட்பட சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அபிேஷக பூஜைகளும் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் அனைவரும் காலை 11 மணி அளவில் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திரண்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணிவித்தனர்.
- ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
- கோ-பூஜையினை காண பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
சென்னிமலை:
ஆடி மாதத்தில் பக்திக்கு முக்தி தரும் மாதமாக கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம் ஆகும், இது தேவர்களுக்கு இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்பாக போற்றப்படுகிறது. ஆடி அமாவாசையில் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் செய்து வேண்டு தல் வைப்பர். இந்த நாளில் வேண்டுதல் வைத்தால் நினைத்த காரியம் நிறைவே றும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை நடந்த கோ-பூஜையினை காண பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
தொடர்ந்து நடந்த அபிேஷ கத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேன் மூலம் வந்திருந்தனர்.
அவர்கள் பால், தயிர் உட்பட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது. பொது தரிசனத்தில் பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிக மாக இருந்து வாகன நெரிசல் ஏற்பட்டதால் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.