search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 கட்டமாக"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • லைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கு ம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

    டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாக தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், தோவாளை வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், கல்குளம் வருவாய் வட்டத்தில் உள்ள 126 கிராமங்களின் நியாய விலை கடை பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    நாகர்கோவில் மாநக ராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பத்மனாபபுரம் மற்றும் குளச்சல் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நியாய விலைக்கடை பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    கல்லுகூட்டம், கோத நல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தலா 5, குமார புரம் பேரூராட்சி பகுதியில் 7, மணவாளகுறிச்சி, நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் தலா 6, மண்டைக்காடு பேரூ ராட்சியில் 8, வெள்ளிமலை பேரூராட்சியில் 5 நியாய விலைக்கடைகளில் முதல் கட்டமாக விண்ணப் பதிவு முகாம்கள் நடைபெறும். மேலும் வில்லுக்குறி பேரூ ராட்சிக்குட்பட்ட 14, 4, 5, 11, 6, 4 ஆகிய வார்டுகளிலுள்ள நியாயவிலை கடைகளிலும் முகாம் நடைபெறும்.

    திருவிதாங்கோடு பேரூ ராட்சிக்குட்பட்ட வார்டு எண். 12, திங்கள் நகர் பேருராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1, 11, 12, 8, 15 ஆகியவற்றில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் கள் நடைபெறும்.

    சடையமங்கலம், முத்தல குறிச்சி, தென்கரை, வெள்ளி சந்தை கக்கோட்டுதலை, நெட்டாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலா 2 கட்டடிமாங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 5, குருந்தன்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7, சைமன் காலனி பகுதியில் 4, முட்டம் பகுதியில் 8 நியாய விலைக்கடைகளிலும், தலக்குளம் ஊராட்சி பகுதியிலுள்ள 1 நியாய விலைக்கடையிலும் முதற்கட்டமாக விண்ணபப்பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவட்டார் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், கிள்ளியூர் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், விளவங்கோடு வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். கல்குளம் வட்டத்தில் மீத முள்ள 49 நியாய விலை கடைப் பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். கொல்லங் கோடு நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள நியாய விலைக் கடை பகுதியில் 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.கல்குளம் வட்டத்தில் இரணியல் பேரூராட்சிப் பகுதியிலுள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், கப்பியறை பேரூராட்சிப் பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், முளகுமூடு பேரூராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடைகளிலும், வாள்வச்சகோஷ்டம் பேரூ ராட்சி பகுதியிலுள்ள 8 நியாயவிலைக்கடைகளிலும் இரண்டாம் கட்ட விண்ணப் பபதிவு முகாம் நடைபெறும்.

    மேலும் வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 15, திருவி தாங்கோடு பேரூராட்சி பகுதியில் வார்டு எண். 6, 7, 12, திங்கள்நகர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 5 ஆகிய நியாய விலை கடைகளிலும், நுள்ளிவிளை ஊராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடை களிலும், திக்கணங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், மருதூர்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4 நியாய விலைக்கடைகளிலும், ஆத்திவிளை ஊராட்சியில் உள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×