என் மலர்
நீங்கள் தேடியது "மது அருந்திய"
- கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அப்போது பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோபி:
கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த அரசு என்கிற ராமன் (19) மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோன்று பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த கவுதம் (20), அஜித்குமார்(21) ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.