என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோடீஸ்வரர்"
- 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
- இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்
பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,
"இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,
16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.
10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ரேணுகா ஜக்தியானி.
- போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார்.
வாஷிங்டன்:
லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓ ரேணுகா ஜக்தியானி. இந்த நிறுவனத்தை அவரது கணவர் மிக்கி ஜக்தியாணி தொடங்கினார்.
2023 மே மாதம் கணவர் இறந்த பிறகு சி.இ.ஓ. பதவிக்கு வந்தார் ரேணுகா. தற்போது இந்த நிறுவனத்தில் தற்போது 50,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர்.
ரேணுகா ஜக்தியானி 2007-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது பெற்றார். 2012-ல் அரபு நாடுகளின் தொழில்கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்ற அவர், 2014-ல் உலக தொழில்முனைவோர் அமைப்பின் சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார்.
- புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
- ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
புதுடெல்லி:
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைபிடித்துள்ளார். புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. இதையடுத்து அவற்றின் ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1.348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி என்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 805-க்கும் வர்த்தகமாகின.
இவ்வாறு புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது.
- காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.
பெங்களூரு:
நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன.
இதில் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள். கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள்.
இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏ.வும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டி.கே.சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் ரூ.273 கோடி அசையா சொத்துக்களும், ரூ.1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார்.
2-வது இடத்தில் கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ.வும், தொழில் அதிபருமான கே.எச்.புட்டாசுவாமி கவுடா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1267 கோடி. இவருக்கு ரூ.5 கோடி மட்டுமே கடன் உள்ளது. 3-வது இடத்தை கர்நாடக சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ.வுமான காங்கிரசை சேர்ந்த பிரியகிருஷ்ணா உள்ளார். 39 வயதே ஆன இவரது சொத்து மதிப்பு ரூ.1156 கோடி. இவர் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ரூ.881 கோடிக்கு கடன் உள்ளவர்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவரது தந்தை எம்.கிருஷ்ணப்பா கர்நாடகாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார்.
கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு 4-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.668 கோடி. கர்நாடகாவின் மற்றொரு எம்.எல்.ஏ. கலிஜனார்த்த ரெட்டி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ளார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களில் 32 பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். இவர்களில் காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.
அதே நேரத்தில் மிகவும் குறைந்த சொத்துக்களை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் சிந்து தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தாரா இடம்பெற்றுள்ளார். முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்துக்கள் வெறும் ரூ.1700 தான். இவருக்கு அடுத்த்அ இடத்தை ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரந்தா முதுலிஒ பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் மட்டுமே. மேலும் ரூ.18 ஆயிரத்து 370 சொத்துக்களை கொண்ட பஞ்ச்சாபின் நரீந்தர்பால்சிங் சாவ்னா 3-வது இடத்திலும், ரூ.24 ஆயிரத்து 409 மதிப்பு சொத்துகளுடன் பஞ்சாப் நரிந்தர் கவுர்பராஜ் 4-வது இடத்திலும், ரூ.30 ஆயிரம் மதிப்பு சொத்துடன் சார்க்கண் எம்.எல்.ஏ. மங்கள் கலிந்தியும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்