என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலைகழிப்பு"

    • அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் எடுக்க முடியாமல் கர்ப்பிணிகள், நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.
    • ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையானது விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை மருத்துவமனை யாக விளங்குகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட உள்புற வெளிப்புற நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குறிப்பாக அருப்புக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களான ஆத்திப்பட்டி, திருச்சுழி, கல்லூரணி, மண்டபசாலை, ரெட்டியாபட்டி, பரளச்சி, பந்தல்குடி உள்பட பல கிராமங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்கு இங்குதான் வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு பிரசவத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சி.டி.ஸ்கேன் எடுக்கும் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண்கள், எலும்பு முறிவு, தலைகாயம் உள்ளிட்டவற்றுக்கு ஸ்கேன் எடுக்க முடியவில்லை. அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.

    குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுகின்றனர். எனவே அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறையை நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

    ×