என் மலர்
முகப்பு » அத்தியாவசிய பொருள்களின் விலை
நீங்கள் தேடியது "அத்தியாவசிய பொருள்களின் விலை"
- அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கோஷம்
- திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.மோகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், ராமச்ச ந்திரன் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கண்டித்து கோஷம் எழுப்பினர்.
×
X