search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி யமுனை ஆறு"

    • மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
    • மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஆபத்தான வகையில் உள்ளளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் மோசமான காற்றின் தரவரிசையில் டெல்லி முதலிடத்தில் இருந்தது.

    டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

    இந்த நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற பனிப்படலம்போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




    • யமுனை நதியில் பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் குளித்து வழிபாடு நடத்தினார்.
    • அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

    மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று கூறி டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் யமுனை நதிக்கரையில் நீராடினார்.

    பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விரேந்தர் சச்சுதேவ், "யமுனை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு வழங்கிய 8,500 கோடி ரூபாய்க்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சச்தேவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், "டெல்லி நகரத்தின் யமுனை நதிக்கரையில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது. டெல்லி பாஜக தலைவர் அரியானா அரசாங்கத்துடன் பேசி சோனிபட் மற்றும் பானிபட் ஆகியவற்றிலிருந்து தொழிற்சாலை கழிவுகளை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    • டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக உயர்ந்துள்ளது.
    • வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள்.

    டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது. இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியது.

    அதன்படி, நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக இருந்தது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்தது.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக உயர்ந்துள்ளது.

    வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள் புதுடெல்லி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது.
    • உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது.

    இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது.

    அதன்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் ஜூலை 22 (இன்று) வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    ×