என் மலர்
நீங்கள் தேடியது "ஐப்பசி பவுர்ணமி"
- தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.
- முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.
1. முண்டகக்கண்ணியம்மன் அவதாரம் நடந்த போது முதலில் அதை மயிலை கிராம மக்கள் எல்லை காவல் தெய்வமாகவே பார்த்தனர்.
2. முண்டகக் கண்ணி அம்மன் முதலில் சென்னை கடலோரத்தில் தோன்றியதாகவும், அவள் சுயம்புவாக தோன்றிய இடத்தில் இருந்து கடல் உள்வாங்கி சென்று விட்டதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
3. ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். அதே தினத்தன்று முண்டகக்கண்ணி அம்மனுக்கும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அன்னத்திலும் அம்மன் இருந்து அருள்புரிவதாக கருதப்படுகிறது.
4. இத்தலத்தின் தல மரம் ஆலமரமாகும். தற்போது கல் மரம் ஒன்றும் தல விருட்சம் போல வளர்ந்து வருகிறது.
5. முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயரில் சென்னையில் வேறு எங்கும் ஆலயங்கள் இல்லை. முண்டகக்கண்ணி அம்மன் என்றாலே அது மயிலை முண்டகக்கண்ணியைத்தான் குறிக்கும்.
6. முண்டகக்கண்ணி அம்மனை ரோட்டில் போகும் போதே மிக எளிதாக தரிசிக்க முடியும். அதற்கு ஏற்ப கோவில் அமைப்பு உள்ளது.
7. முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் தான்.
8. பெரியபாளையம் தலத்தில் செய்வது போல சில சமயம் இங்கும் பெண்கள் வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வந்து பிரார்த்தனை செய்வதுண்டு.
9. அம்மை நோய், கண் நோய், ராகு-கேதுவால் ஏற்படும் திருமண தோஷ நிவர்த்தி ஆகிய மூன்றுக்கும் இத்தலம் மிகச் சிறந்த பரிகார தலமாக உள்ளது.
10. முண்டகக் கண்ணியம்மனிடம் வைக்கப்படும் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து அபிகேஷகம், அங்க பிரதட்சனம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
11. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் கபாலிஸ்வரர் கோவில், மாதவப் பெருமாள் கோவில் உள்ளன. அம்மனை வழிபட செல்லும் போது இத்தலங்களுக்கும் சென்று வரலாம்.
12. முண்டகக்கண்ணி அம்மன் இப்போதும் ஓலைக் குடிசையிலேயே இருப்பதால், அவள் இதன் மூலம் எளிமையை தன் பக்தர்களுக்கு உணர்த்துவதாக ஐதீகம்.
13. தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.
14. மயிலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் எல்லா நல்ல நிகழ்ச்சிகளுக்கும் முன்பு முதல் பிரார்த்தனையை ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மனுக்கு நடத்துவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
15. அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள தெருக்களில் வசிக்கும் பெண்கள் காலை 5.45 மணிக்கெல்லாம் வந்து நடை திறந்ததும் அம்மனை கண்டு தரிசனம் செய்த பிறகே வேறு வேலை செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
16. அருள்மிகு முண்டக்கண்ணி அம்மனை மகா மாரியம்மன் என்றும் அழைக்கிறார்கள்.
17. ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அபிஷேகம் நடத்த பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் தினமும் இத்தலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கட்டணம் செலுத்தி அபிஷேகம் நடத்தி மன ஆறுதல் பெறுகிறார்கள்.
18. முண்டகக்கண்ணி அம்மனுக்கு தினமும் காலை அபிகேஷம் நடத்தும் போது பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை என்று அம்மன் மனம் குளிரும் வகையில் அபிஷேகம் செய்வார்கள்.
19. மாலையில் தினமும் அம்மனை வெள்ளி அல்லது தங்க கலசத்தால் அலங்கரிப்பார்கள். இதனால் முண்டகக்கண்ணி அம்மனை காலையில் அபிஷேகப் பிரியை, மாலையில் அலங்காரப் பிரியை என்று மயிலைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
20. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் பெண்கள் முண்டகக்கண்ணி அம்மனுக்கு வளையல் சார்த்தி வழிபாடு செய்வதாக தெரிய வந்துள்ளது.
21. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கடந்து விட்டதால் வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
22. இத்தலத்தில் ஆடித் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
23. முண்டகக்கண்ணி அம்மனை வழிபட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
24. தினமும் இத்தலத்தில் அன்னதானம் போடப்படுகிறது. நீங்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தினால் 100 பேருக்கு அன்னதானம் அளிக்கலாம்.
25. 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் முண்டகக்கண்ணி அம்மனை தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
26. இத்தலத்தில் ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுக்கலாம்.
27. முண்டகக்கண்ணி அம்மன் தோன்றிய சுயம்புவின் முகப்புத் தோற்றத்தில் நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் நடக்கும் போது உன்னிப்பாக கவனித்தால் இதை காணலாம்.
28. வெப்பத்தை தான் தாங்கிக் கொண்டு, மக்களுக்கு குளிர்ச்சியை அளிக்கவே முண்டகக்கண்ணி அம்மன் ஓலைக்குடிசையில் வீற்றிருப்பதாக முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
29. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முண்டகக்கண்ணி அம்மனிடம் வேண்டிக் கொண்டு, நோய் நிவர்த்தியானதும், அந்த உடல் உறுப்பு போன்ற வெள்ளி கவசங்களை வாங்கி உண்டியலில் போடுகிறார்கள்.
30. சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்படலாம். அந்த தோஷ நிவர்த்திக்கு மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போட்டு வருகிறார்கள். இதன் மூலம் முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.
31. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிகச் சிறந்த பரிகாரத்தலமாக மட்டுமல்ல, சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் உள்ளது.
32. இத்தலத்தில் உள்ள தங்கரதம் முழுக்க-முழுக்க பக்தர்கள் கொடுத்த உண்டியல் பணம் மூலம் செய்யப்பட்டதாகும். அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
33. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு, ஆடு, கோழி சுற்றி விடுதல், பாவாடை சாத்துதல், முடி காணிக்கை கொடுத்தல், வேப்பிலை சாத்துதல், தொட்டில் பிள்ளை, மஞ்சள் காப்பு, பூங்கரகம் எடுத்தல் போன்ற நேர்ச்சை கடன்களை நிறைவேற்றுவது உண்டு.
34. இத்தலத்தில் கூழ்கஞ்சி வார்த்தல் செய்ய வேண்டுமானால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
35. பக்தர்கள் விரும்பினால் கோடி தீபம் விளக்கு ஏற்றலாம். ஒரு விளக்குக்கு ரூ.2 தான் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
36. இத்தலத்தில் கருவறையை நெருங்கியதும் மஞ்சள், இளநீர், பால், பூக்கள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றின் கதம்பமான வாசனையை பக்தர்கள் உணர முடியும்.
37. இத்தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பெண்கள் தங்கள் கைப்பட மஞ்சள் தெளித்து குங்குமம் வைத்து வழிபட அனுமதிக்கிறார்கள்.
38. முண்டகக்கண்ணி அம்மன் பார்வைபட்டால் போதும் நம் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் என்று வயதான பக்தர்கள் நம்பிக்கையான குரலில் கூறினார்கள்.
39. இத்தலத்துக்கு வாடிக்கையாக வரும் பக்தர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வணங்கும் போது, ஏதோ தங்கள் வீட்டில் உள்ள ஒருவரிடம் சகஜமாக பேசுவது போல பேசி வழிபடுவதை காணலாம்.
40. இத்தலம் தொடர்பான விவரங்களை (044) 24981893 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
- புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் கோரக்கர்.
- அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர்.
பதினெண் சித்தர்களுள் புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் "கோரக்கர்". இவர் அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர். பதினெண் சித்தர்களில் 16-வது இடத்தில் உள்ள இவர், கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தமது இளம் வயதை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இது இவரது பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. இவர் இறப்பில்லா மர்மயோகி என்று சொல்லப்படுகிறது. மேலும், சிவபெருமானிடம் உபதேசம் பெற்று, நாதசைவத்தை தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் 880 வருடம், 11 நாள் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் தென், வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் இவரின் வரலாறு அறியப்பட்டுள்ளது.
இவரின் ஜீவசமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்குபொய்கை நல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது. வடக்குபொய்கை நல்லூரில் சமாதி கூடிய காலம் கி.பி. 1233-ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்கு பின்னும் வாழ்ந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பொதிய மலை, ஆனை மலை, கோரக் நாத்திடல் (மானாமதுரை), பரூரப்பட்டி (தென் ஆற்காடு), கோரக்கர் குண்டா (சதுரகிரி), பத்மாசுரன் மலை (கர்நாடகம்), கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் இவரது ஜீவசமாதிகள் உள்ளன.
இவற்றில் வடக்குபொய்கைநல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிகை மலை, ஆனை மலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக் நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் எனும் இடத்தில் உள்ளது. அங்குள்ள ஜீவசமாதிக்கு சித்ரா பவுர்ணமி அன்று பொங்கலிட்டு படையல் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதேப்போல், உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட 'கோரக்நாத் மந்திர்" என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.
வரங்கள் அருளும் 'கோரக்கர்'
இவருடன் தொடர்புடைய பிற மடங்களாக பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திரிகோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களை போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களை எழுதியுள்ளார்.
ஐப்பசி பவுர்ணமி நாளில் ஜீவசமாதி அடைந்த இவரை வடக்குபொய்கை நல்லூரில் சென்று வழிபடுபவர்களுக்கு வரங்கள் பல அருள்வதாக இன்றும் பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
- சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
- வறுமையில் இருந்து விடுபட்டு பசியில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.
உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் சிவபெருமான். அந்த இறைவனுக்கு பக்தர்கள் அனைவரும் உணவை படைத்து வழிபடும் சிறப்புமிக்க நாளே, ஐப்பசி பவுர்ணமியில் வரும் ` அன்னாபிஷேகம்' திருநாள் ஆகும்.

தட்சனுக்கு 50 பெண் பிள்ளைகள். அவர்களில் அஸ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திர பெண்களை, சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். சந்திரனோ. தன்னுடைய மனைவியர்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோருடன் மட்டும் அதிக அன்பு காட்டினான். அதிலும் ரோகிணியுடன் அதீத அன்பு செலுத்தினான்.
இதனால் மற்ற பெண்கள் அனைவரும் தன்னுடைய தந்தையிடம் இதுபற்றி கூறினர். தன் மகள்கள் அனைவரையும் ஒன்றுபோல் பார்க்காததால், சந்திரனின் மீது கோபம் கொண்ட தட்சன். "ஒளி பொருந்திய கலைகளைப் பெற்றிருப்பதால்தான் நீ இப்படி நடந்து கொண்டாய். உன்னுடைய கலைகள் ஒவ்வொன்றாய் தேய்ந்து போகட்டும்" என்று சாபமிட்டார்.
அதன்படியே தினம் ஒரு கலையாக, சந்திரனின் கலைகள் தேய்ந்து வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த சந்திரன், தன் சாபம் நீங்க வழிதேடி அலைந்தான். இறுதியில் சிவபெருமானே கதி என்று அவரை சரணடைந்தான்.
அப்போது சந்திரன், கலைகள் பலவும் தேய்ந்து மூன்றாம் பிறையாக உருமாறி நின்றான். அவனுக்கு அடைக்கலம் தந்த சிவ பெருமான், மூன்றாம் பிறை சந்திரனை தன்னுடைய தலை மீது சூடிக்கொண்டார்.
பின் சந்திரனை நோக்கி, "நீ உன் தவறை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாக தேயவும், பின் வளரவும் அருள்புரிகிறோம். இருப்பினும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் மட்டும் உன்னுடைய 16 கலைகளுடனும் நீ மிளிர்வாய்" என்றார்.
அதன் காரணமாகத்தான் சந்திரன், ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் மட்டும் மிகுந்த ஒளியுடன் காட்சி தருகிறான். (அறிவியல் ரீதியாக ஐப்பசி தினத்தன்று. பூமிக்கு அருகாமையில் சந்திரன் வருவதால், இந்த அதிக ஒளிர்வு இருப்பதாக சொல்லப்படுகிறது.)
இத்தகைய சிறப்புமிக்க ஐப்பசி பவுர்ணமி நாளில் தான். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

நவ கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே தனக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு தன்னுடைய தானியத்தால் சந்திரன் அபிஷேகிப்பதாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு 70 வகையான மங்கலப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். அதில் முக்கியமான ஒன்றுதான், அன்னம்.
ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், உலகம் முழுவதும் சுபிட்சம் பெறும் என்று சிவாகமம் கூறுகிறது.

ஐப்பசி பவுர்ணமி நாள் அன்று, காலையிலேயே சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும்.
பின்னர் சாயரட்சை பூஜை நேரமான, மாலை வேளையில், புதிய நெல் கொண்டு அன்னம் படைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
அப்போது சிவலிங்கம் மறையும் அளவிற்கு அன்னத்தை சிவலிங்க திருமேனி முழுவதும் சாற்றுவார்கள்.
இந்த அன்னாபிஷேக அலங்காரமானது, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை அப்படியே இருக்கும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். இரவு 8.30 மணிக்கு மேல் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் அன்னத்தை திருக்குளம் அல்லது நீர்நிலைகளில் கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
சிவபெருமானுக்கு செய்யப்பட்ட அன்னாபிஷேக அலங்காரத்தை காணும் பக்தர்கள், வறுமையில் இருந்து விடுபட்டு பசியில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.
- கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.
- கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர்.
சோறு கண்டால் சொர்க்கம் உண்டு என்பார்கள் முன்னோர்களும், சான்றோர்களும் சொல்லி வைத்த பழமொழிகளும், சொல் வழக்குகளும், இன்று அபத்தமான அர்த்தங்களைத் தரும் வகையில் திரிந்து நிற்பதை நாம் உணர முடியும்.
அவற்றில் ஒன்றுதான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம். சோறு எங்க கிடைக்கிறதோ, அங்கேயே தங்களின் புகலிடமாக மாற்றிக்கொள்பவர்களை, கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.

உண்மையில் 'சோறு கண்டால் சொர்க்கம் என்பதே பழமொழியின் சரியான வாக்கியம். அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் உள்ள ஒவ்வொரு பருக்கை அன்னமும், ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படும்.
எனவே அன்றயை தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர். மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் (பிறப்பில்லாத நிலை) கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத் தான் `சோறு கண்டால் சொர்க்கம் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர்.
- அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி பவுர்ணமி திதி.
- சந்திரன் சாபம் நீங்கி பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று உதித்து வருவார்.
"சோறு கண்ட இடம் சொர்க்கம்" ன்னு ஒரு பழமொழி உண்டு.
சோற்றை கண்டதும் சொர்க்கம் கிடைக்குமா... சோறு பரிமாறப்படும் இடம் சொர்க்கம் போன்றதா என நிறைய கேள்விகள் மனதில்.
சோறு கண்டதும் சொர்க்கம் என சொல்லும் சொலவடையின் அர்த்தத்தைத் தேடும் போது தான் உலகிற்கே படியளக்கும் பரமசிவனாரின் மகிமை புரிய ஆரம்பித்தது.

நம்மில் நிறைய பேர் ஆலயத்திற்கு செல்லும் போது சுவாமிக்கு நடைபெறும் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தைல அபிஷேகம் மற்றும் சந்தனம், விபூதி, மஞ்சள், போன்ற பிற வாசனை பொருட்களால் நடைபெறும் அபிஷேகத்தை பார்த்திருப்போம்.
சோற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதை நம்மில் வெகு சிலரே பார்த்திருப்போம். ஐப்பசி மாத பவுர்ணமி திதியின் போது சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவர் என பிரம்மன் நினைத்தார்.
பிரம்மனின் அகந்தையை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஓர் தலையை சிவபெருமான் கொய்து பிரம்மனை நான்முகன் ஆக ஆக்கினார்.
சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட பிரம்ம தேவரின் தலையானது சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டு சிவனாருக்கு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.
சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலம் ஆனது எப்போதும் பசியால் அனத்திக் கொண்டிருந்தது.
பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்டார் சிவபெருமான்.
தனக்கு போதும் என்ற அளவுக்கு உணவு கிடைக்கும் போது சிவபெருமானை விட்டு நீங்கி விடுவதாக பிரம்ம தேவரின் கபாலம் சிவனாரிடம் கூறியது.
சிவபெருமான் கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு பிச்சாடனார் ஆக உருமாறி பூலோகம் வந்தார்.
அன்னமிட்டு நிறையும் போது மட்டுமே அந்த கபாலம் சிவபெருமானின் கையை விட்டு பிரியும் என்பது சிவனாருக்கு பிரம்மனால் கொடுக்கப்பட்ட சாபம் ஆகும்.
சிவ பெருமான் காசிக்கு செல்லும் போது அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது.
இதை அடுத்து சிவபெருமான் கையில் ஒட்டி கொண்டு அவரை படாத பாடுபடுத்திய பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது. சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
அன்னபூரணி அன்னை சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி மாதம் பவுர்ணமி திதி. இதனால் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்கள் அனைத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது .

ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் நீங்கி முழு பொலிவுடன் பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று முழு பொலிவுடன் உதித்து வருவார்..
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர். இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார்.
இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்கிறாள். ரோஹிணியின் தந்தை உன் உடல் தேயட்டும்' என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபம் பெற்றதும் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார். சந்திரன் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார்.
சிவபெருமான் அருளால் சாபம் நீங்க பெற்று சந்திரன் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று முழுமையாக பிரகாசித்தார். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும்.
சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானுக்கு அந்த சந்திரன் முழு பொலிவுடன் இருக்கும் நாளான ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடு ஆக பிறை சூடிய பெருமான் ஆன சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகத்தை தரிசித்தவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அன்னத்திற்கு குறைவு ஏற்படாது. நெல், அரிசி ஆகிறது. அரிசி, சோறாகிறது. சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது.
இது போலவே ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம். அரிசி என்ற வார்த்தையிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர்.
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் பொருள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்திற்கு சமம்.
நன்றாக சோற்றுப் பருக்கையை உற்று நோக்கினால் சோற்றுப் பருக்கையானது சிவலிங்க வடிவில் இருப்பதை காணலாம் .
ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு சாற்றியிருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் நம்மால் சிவலிங்கத்தைக் காண முடியும்.
ஒரே சமயத்தில் கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவத்தை போக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும் அன்று ஒவ்வொரு சோற்றிலும் ஒரு சிவலிங்கத்தை காணலாம் என ஈஸ்வரன் வரம் கொடுத்து இருப்பதால் அந்த வரத்தின் பயனாக நாம் அன்று கோடி கோடி லிங்கத்தை பார்த்த பலனைப் பெறலாம்.
சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட அபிஷேக சோற்றை யார் கண்ணார காண்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் விளைவாகவே சோறு கண்ட இடமே சொர்க்கம் என கூறப்பட்டது.
- மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
- அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.
இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.
இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.