என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளி வேல்"
- நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.
- தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.
மருதமலை கோவிலில் வெள்ளிவேல் திருட்டு நடக்கவில்லை என்றும் அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் திருட்டு நடந்துள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மாவட்டம், மருதமலை. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐள குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன.
கோவை மாவட்டம், பேரூர் வட்டம் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.
இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் ஆகும். இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார்.
இந்த தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.
மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.
மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டுபோனது.
- கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பழமை வாய்ந்த வெள்ளி வேலை திருடிக் கொண்டு தப்பினர். இதனால் கோவில் நிர்வாகி கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப் பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். வெள்ளி வேல் திருட்டு தொடர்பாக மர்ம நபர்க ளை போலீசார் தேடி வருகின்றனர். வெள்ளி மலையாண்டி முருகன் கோவிலில் பாரம்பரியமிக்க வெள்ளி வேல் திருட்டு போய் இருப்பது கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.