என் மலர்
நீங்கள் தேடியது "ஆப்டிகல் பைபர் எனப்படும் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட உள்ளது."
- பாரத் நெட் திட்டம்
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணையதள இணைப்பு வழங்கும் பணி. முழு வீச்சில் நடைபெற்று வரும் இணையதள இணைப்பு வழங்கும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும். மாவட்டத்தல் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்கள், 860 கிராம ஊராட்சிகள் ஆகியவை ஆப்டிகல் பைபர் எனப்படும் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட உள்ளது.
கண்ணாடி இழைகள் தரைவழியாகவும், மின்சார கம்பங்கள் வழியாகவும் கொண்டு செல்லப்படும். இதற்கான உபகரணங்கள் கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகள் ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது அனைத்து கிராம ஊராட்சியும் இணைய வசதி பெறும். கிராம ஊராட்சிகளில் இணைய தள வசதிக்காக அமைக்கப்படும் மின்கலன், இன்வெர்ட்டர், ரூட்டர் மற்றும் கண்ணாடி இழை ஆகியவை அரசின் உடைமையாகும்.
இதை சேதப்படுத்துபவர்கள் மற்றும் திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.