என் மலர்
நீங்கள் தேடியது "திருநங்கையிடம் பணம் கேட்டு தொந்தரவு"
- சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்.இவர் செங்கம் பகுதியில் யாசகம் செய்து வரும் திருநங்கை ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் வாலிபர் விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்தார். அப்போது அந்த திருநங்கையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது திருநங்கையின் தோழி திருநங்கைகள் 4 பேர் வந்தனர். அவர்கள் கஞ்சா போதையில் தொந்தரவு செய்த விக்னேஷை உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்தனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் கஞ்சா வாலிபரை புதிய பஸ்நிலையத்தில் சுற்றி சுற்றி திருநங்கைகள் கட்டைகளால் தாக்கியதில் வாலிபர் நிலை குலைந்து போனார்.
சம்பவம் நடந்து கொண்டிருந்த புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து பெண் காவலர் உட்பட காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருநங்கைகளிடமிருந்து வாலிபர் விக்னேஷை மீட்டு அழைத்துச் சென்றனர்.
மேலும் இந்த சம்பவத்தால் பேருந்துக்காக காத்திருந்தோர் உள்பட பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். வாலிபரை தாக்கியது மட்டுமல்லாமல் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகளை காவல்துறையினர் செங்கம் பகுதியில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் செங்கம் பகுதியில் யாசகம் கேட்டு வரும் திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் செங்கம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.