search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து விவகாரம்"

    • சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
    • எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டதாக ஜூனியர் என்டிஆர் கூறினார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், 24 கோடி மதிப்பு சொத்து விவகாரம் தொடர்பாக நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    ஜூப்லி ஹில்ஸ், ரோடு எண். 75ல் உள்ள 681 சதுர முற்றம் கொண்ட இந்த சொத்தை, ஜூபிலி ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியைச் சேர்ந்த சுங்கு கீதா லட்சுமி என்பவரிடமிருந்து ஜூனியர் என்டிஆர் 2003ல் ரூ.36 லட்சத்திற்கு வாங்கினார். இப்போது நடிகர் கட்டிய ஆடம்பரமான வீட்டை உள்ளடக்கிய இந்த நிலம் தற்போதைய சந்தை விலை சதுர அடிக்கு ரூ. 3.5 லட்சம் என்ற நிலையில் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், சொத்து விவகாரத்தில் முந்தைய உரிமையாளரின் உறவினர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி வங்கிகளில் கடன் பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். வங்கிகள் டிஆர்டியை அணுகியதை அடுத்து, சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

    இந்நிலையில், இந்த சொத்து தொடர்பான நிலத் தகராறில் நிவாரணம் கோரி ஜூனியர் என்டிஆர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் கூறுகையில், "வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட உரிமை ஆவணங்கள் மற்றும் என்னிடம் உள்ள உரிமை ஆவணங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, மேலும் எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டது. அனைத்து வங்கியாளர்கள் மீதும் தற்போது குற்ற வழக்குகள் உள்ளன" என்றார்.

    • தாய் மீதும் தனது மாமா ஷாம்லு மீதும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
    • தாய் தற்கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் லீமாராணி (வயது 42). இவருக்கு சாம்லன் (25) என்ற மகனும் ஷாம்லி (23) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிராங்கோ என்பவருக்கும் ஷாம்லிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஷாம்லி கண வருடன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த வாரம் ஊருக்கு வந்த ஷாம்லி தனது பெற்றோர் வீட்டுக்கு வர வில்லையாம். மேலும் தாயுடன் பேசவும் இல்லை.

    இதனால் மன வேதனை அடைந்த லீமாராணி, தனது அண்ணன் ஷாம்லுவுடன் மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டிற்கு வர மாட்டேன் என்று ஷாம்லி கூறிவிட்டாராம். இதனால் லீமாராணி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக ஷாம்லி, தாய் மீதும் தனது மாமா ஷாம்லு மீதும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    இது லீமாராணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து திருவட்டார் சென்று வருவதாக கூறிச் சென்ற அவர், விஷம் குடித்த நிலையில் சாலை யில் மயங்கி விழுந்தார். அந்த பகுதியை சேர்ந்த வர்கள் லீமாராணியை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரி சோதித்து விட்டு, லீமா ராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தங்கை மேரி மெற்றில்டா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தினார். லீமாராணி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து கல்லூரிக் அனுப்பி வைத்தார்.

    தான் இறந்தபிறகு தனது வீட்டை மகள் ஷாம்லிக்கு கொடுப்பதாக லீமாராணி கூறி இருந்ததாக கூறப்படுகிறது. சொத்து விவகா ரத்தில் மகள் போலீசில் புகார் கொடுத்ததால், தாய் தற்கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×