என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » வேம்பு மரம்
நீங்கள் தேடியது "வேம்பு மரம்"
- அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.
- திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக அரசு, வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்றது.
பின், அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டு வேப்பமரத்திற்கு சிவாச்சாரியார் மூலம் தாலி கட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
முடிவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
×
X