என் மலர்
முகப்பு » விமானம் தீ விபத்து
நீங்கள் தேடியது "விமானம் தீ விபத்து"
- விமானம் ஒன்றில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
- விமானம் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்றில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஒரு என்ஜினில் திடீரென்று தீப்பிடித்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனர்.
மேலும் தீயணைப்பு படையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பணியாளர்கள் மற்றும் விமானம் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
×
X