என் மலர்
முகப்பு » தொழிலாளி மாயம் போலீசில் புகார்
நீங்கள் தேடியது "தொழிலாளி மாயம் போலீசில் புகார்"
- மனைவி போலீசில் புகார்
- வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
செய்யாறு:
செய்யாறு அடுத்த குடை நகர் கே எச் கார்டன் சேர்ந்தவர் பிரதாப் (வயது 28). இவர் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் பூர்ணிமா என்பவரை கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பூர்ணிமா அக்கம் பக்கத்தில் வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தேடி உள்ளார்.
அவர் கிடைக்காததால் செய்யாறு போலீசில் மாயமான கணவரை கண்டுபிடித்து தர கோரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதாப்பை தேடி வருகின்றனர்.
×
X