search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ஆலயங்கள்"

    • மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு
    • தனிப்பட்ட வீடுகளில் பல்வேறு இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆணைய உறுப்பி னர்-செயலர் சம்பத், துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ், உறுப்பினர்கள் தமீம் அன்சாரி, மன்ஹித்சிங் நாயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கிறிஸ்தவ சபையினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு விண்ணப்பித்தும் அனுமதி வழங்கப்படவில்லை. காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆலயங்களை புதுப்பிப்பதற்கும் அனுமதி தருவதற்கும் கால தாமதப்படுத்தி வருகிறார்கள். வீடுகளில் கோர்ட்டின் அனுமதி பெற்று ஜெபக்கூடம் நடத்தி வருகிறோம். ஆனால் போலீசார் அதை தடுக்கிறார்கள். நாங்கள் கடந்த 27 மாதங்களாக நிம்மதியாக உள்ளோம் என்றனர்.

    இதனை தொடர்ந்து தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில்,

    பல ஆண்டுகளாக செயல்படும் ஆலயங்களில், கட்டிடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் காலதாமதம் இன்றி அனுமதி வழங்க வேண்டும். புதிய ஆலயங்கள் கட்டுவதாக இருந்தால் சட்ட விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட வீடுகளில் பல்வேறு இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. அதில் என்ன பிரச்சனை என்பதை போலீசார் தெரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி வாங்க தேவையில்லை. பொது மக்களுக்கு இடையூறு இன்றி நடத்த வேண்டும் என்றார்.

    ×