search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி கணக்கு தொடங்க"

    • ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
    • இந்த கணக்கிற்கு இருப்புதொகை எதுவும் கிடையாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால் தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

    இந்த கணக்கிற்கு இருப்புதொகை எதுவும் கிடையாது. கலைஞர் மகளிர் உரிமைதொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களிலும் சிறப்பு சேவை மூலமும், தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

    இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அனுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன் நகரங்களில் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

    கலைஞர் மகளிர் உரிமை த்தொகை பெறும் பயனாளி கள் மட்டு மி ல்லாமல் 100 நாள் வேலைத் திட்டபயனாளிகள், பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் முதியோர், மாற்றுத்தி றனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    எனவே ஈரோடு மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மாவட்டத் திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெ ண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயனடை யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×