search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலாற்று"

    • சேலம்- –சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு வாமனக்கல் கேட்பாரற்று கிடந்தது.
    • இது மட்டுமின்றி பெருமாள் கோவிலின் நிலத்தை அப கரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதை யும் இந்த வாமனக்கல் உணர்த்துகிறது.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் பெருமாள் கோவிலுக்கு தானம் செய்யப்படும் நிலத்தின் எல்லைக்கல்லில் வாமனன் உருவம் பொறிக்கப்படுவது முன்னோர்களிடையே மரபாக இருந்துள்ளது.

    கோவிலுக்கு தானம் கொடுத்த நிலத்தை அப கரிப்பவர்கள், வாமனனால் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கையில் வாமனன் உருவத்தை பொறித்ததாக கருதப்படுகிறது.

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் சேலம்- –சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு வாமனக்கல் கேட்பாரற்று கிடந்தது. இந்த கல்லில் வா மனன் உருவம் மட்டுமின்றி மேற்பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்களும், வா மனன் கீழ் நோக்கிய வலது கையில் கமண்டலமும், மேல் நோக்கிய இடது கை யில் குடையும் பொறிக்கப் பட்டுள்ளது. சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை யாரும் அழிக்கக் கூடாது என்பது இந்த குறியீட்டின் பொருளாகும்.

    இக்கல்லை கண்டறிந்த சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர், வரலாற்று சிறப்பு மிக்க இந்த வாம னக்கல்லை பாதுகாக்குமாறு இப்பகுதியை சேர்ந்த தன்னார்வ லர்களிடம் கேட்டு க்கொண்டனர். இதனையடு த்து, இக்கல்லை மீட்ட இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பேரூராட்சி அலுவல கத்தின் கிழக்குப்புற சுற்று சுவருக்கு அருகில் நட்டு வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த இளை ஞர்களுக்கு சேலம் வர லாற்று ஆய்வு மையத்தினர் பாராட்டு தெரி வித்துள்ள னர்.

    வாமனக்கல் அமைப்பது ஏன்?

    பெரு மாளின் அவதாரங் களில் 5- வது அவதாரமாக வாமனன் அவதாரம் குறிப்பிடப்படுகிறது. பிரகலாதனின் பேரன் மாவலியின் செருக்கை அடக்க திருமால், வாமனன் வடிவம் கொண்டு மாவலி யிடம் 3 அடி நிலம் கேட்ட தாகவும், ஒரு அடியில் வானத்தையும், 2-வது அடியில் பூமியையும் அளந்து விட்டு 3-வது அடியை வைக்க இடமின்றி, மாவலி யின் தலையில் வாமனன் வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையிலே பெருமாள் கோவிலுக்கு முன்னோர்கள் நிலம் தானம் செய்தால் அந்த எல்லைக்கல்லில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட தாக கருதப்படுகிறது. இது மட்டுமின்றி பெருமாள் கோவிலின் நிலத்தை அப கரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதை யும் இந்த வாமனக்கல் உணர்த்துகிறது.

    ×