என் மலர்
நீங்கள் தேடியது "Cell phone shoplifter arrested செல்போன்"
- எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.
- மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்செங்கோடு:
எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் பஸ்நிறுத்தத்தில் எலச்சி பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்தி ரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் சிக்கி னார். அப்போது அங்கு வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பேசினார்.
சந்தேகமடைந்து போலீ சார் விசாரித்த போது அவர் சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடியைச் சேர்ந்த மோகன்குமார் (39) என்பதும், அவர், எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.
கைது
மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.