search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்டிக்க"

    • இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
    • மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.ஆனால் மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 முக்கிய கோவில்களான கொல்லூர் முகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதா கோவில் மற்றும் தர்மஸ்தலாவுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அதே நேரத்தில் திருவனந்தபுரம்-மங்களூர் இடையே தினசரி 3 இரவு நேர ரயில்கள் (16629/16630, 16603/16604 மற்றும் 16347/16348) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    இந்த 3 ெரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலை (16347/ 16348) மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்படும் போது, கன்னியாகுமரியிலிருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையிலும் மங்களூரிலிருந்து புறப்பட்டு வருகின்ற ரெயில், சூரிய உதயத்தை காண்பதற்கு ஏதுவாக காலை 6 மணிக்கு முன்பாக கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இயக்கப்ப டவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×