என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருவாய்த்துறை அலுவலர்கள்"
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.
- வேலை நிறுத்தத்தில் மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால், வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் மீண்டும் பதவியேற்றார்.
- போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.
போகலூர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கடந்த 14-ந்தேதி யன்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடை பெற்று, அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டது.
இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாத புரம் மாவட்ட தலைவராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.
மீண்டும் மாவட்ட தலைவராக பதவியேற்ற பழனிக்குமாருக்கு போகலூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தொழி லதிபர் ஜே.எஸ்.லோகி தாசன், வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.