search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ் அத்வாலே"

    • எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
    • 26 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன.

    26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி வருவார்.

    தற்போதைய சூழ்நிலையில் நிதிஷ்குமார் மகிழ்ச்சியாக காணப்படவில்லை. எதிர்க்கட்சி கூட்டணிகள் அடுத்த கூட்டம் நடைபெறும் மும்பைக்கு அவர் நிச்சயம் செல்ல மாட்டார் என தெரிவித்தார்.

    ×