என் மலர்
நீங்கள் தேடியது "இறால் குஞ்சு"
- மன்னாா் வளைகுடா கடலில் 45 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.
- இதற்கான ஏற்பாடுகளை விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி, பாம்பன், மண்ட பம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மீனவா்கள் அதிகளவில் இறால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனா். மண்டபத்தை அடுத்த மரைக்காயா் பட்டணம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத் தின் கீழ் பச்சை வரி இறால் குஞ்சுகள் பொறிக்க வைக்கப்பட்டு, கடலில் விடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று 45 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் படகில் எடுத்துச் செல்லப்பட்டு மன்னாா் வளைகுடா கடலில் விடப்பட்டன.
இதற்கு கடல் மீன் ஆராய்ச்சி நிலையத் தலை வா் தமிழ்மணி தலைமை வகித்தாா். ராமேசுவரம் மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி, மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசு ராஜா, எமரிட், விஞ்ஞா னிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தார்.