என் மலர்
நீங்கள் தேடியது "வீரட்டானேஸ்வரர் கோவில்"
- ரிஷப வாகனத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பிரகாரவலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
- நேர்த்தி கடனுக்காகவும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இங்கு பிரதோஷ தினத்தில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆடிமாதம் பிரதோஷ தினமான நேற்று மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவைகளும், தொடர்ந்து மகா தீபாராதனையும், பின்னர் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும் ஐதீக நிகழ்வும் நடந்தது.மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பிரகாரவலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தின்ஷா, உற்சவதாரர், சிவனடியார்கள் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.