search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்சிஜன்"

    • கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
    • கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும்

    அமரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    கடல், நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆனதாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையும் நீரே ஆகும். இந்த சூழலில் நீர் நிலைகளில் ஆக்சிஜன் வேகமாக குறைந்து வருவதால் நீரை சார்ந்துள்ள உயிர்க்கோலம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஏனெனில் கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.

    எனவே ஆக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும். மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்சிஜன் கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது. ஆகையால் கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்
    • பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும்.

    சுவட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறக்க தற்கொலை பாட் களை விரைவில் அந்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் -கள் கடந்த  2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.

     

    ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சியூலுக்குள்  நபர் படுத்ததும் ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும் . இதனால்  மயக்கம் ஏற்பட்டு ஹைபோக்ஸியா மூலம் உயிரிழப்பு ஏற்படும். சுவாசிக்கும் காற்றானது 78.09% சதவீத நைட்ரஜனாலும், 20.95% ஆக்சிஜனாலும், 0.93% ஆர்கான், 0.04% கார்பன் - டைஆக்ஸைட் ஆகியவற்றாலும் ஆனது ஆகும்.

     

    தீராத நோயினால்  பாதிக்கப்பட்டுள்ள  நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அமைதியான மரணத்தை  எதிர்கொள்வதற்கு இது பயன்படும் என்று இந்த திட்டத்தை  இதுசார்த்து இயங்கி வரும் கடைசி புகலிடம் [Last Resort] அமைப்பு வரவேற்றுள்ளது.

    இந்த வகையில் மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடனே இந்த வசதி ஒருவருக்கு வழங்கப்படும்.

    அவ்வாறு மரணிக்க விரும்விபுவோர், இந்த கேப்சியூலில் உள்ளே படுத்துக்கொண்டு கதவை மூட வேண்டும். உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திரக் குரல், நீங்கள் யார்? எங்கு இருக்கிறீர்கள்? பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும்.

     

    அதற்கு பதிலளித்தபின் பட்டனை அழுத்தினால், உள்ளே காற்றில் உள்ள ஆக்சிஜன் வாயு 30 வினாடிகளில் 21 சதீவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக குறைந்துவிடும். உள்ளே உள்ள நபர் மயக்க நிலையிலேயே இருப்பார். சுமார் 5 நிமிடங்கள் கழித்து மரணம் ஏற்படும்.  

    பட்டனை அழுத்திய பிறகு தங்களது முடிவை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. இன்னும் சில மாதங்களில் இந்த வகை கேப்சியூல்கள் சுவிட்ஸர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. 

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    • இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
    • உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

    உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் அவருக்கு சீராக சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருத்தும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.

    உடனே வார்டில் அந்த மாணவரை அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த மாஸ்கை பொருத்துவவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து இன்னொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும்.

    இந்த மாஸ்கை பொருத்தும் போது அதில் உள்ள எலாஸ்டிக் கயிறை தலையின் பின்பக்கம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மட்டும் வாய் பகுதியை விட்டு நகராமல் அப்படியே இருக்கும்.

    ஆனால் இந்த மாணவருக்கு மாஸ்க் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபுடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மாணவரும் அப்படியே பிடித்து சிரமப்பட்டு சமாளித்துள்ளார்.

    இதை பார்த்த நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ எடுத்தவர் கூறும்போது, இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார். மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என்பதற்கு மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.

    ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வழியில்லை.

    இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார். 

    ×