என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரோட்டில் 10 ரேஷன் கடைகளில்"
- ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 200 ஐ தாண்டியது. தக்காளி விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் தக்காளி விலை கிலோ ரூ.160 வரை விற்பனை யானது. இதை எடுத்து தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தக்காளி விலை குறைய தொடங்கியது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 150 வரை விற்பனையானது.
இதனை அடுத்து அரசு மாற்று ஏற்பாடாக இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 500 ரேஷன் கடைகளில் மலிவு விலை யில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு கொல்ல ம்பாளையம் கூட்டுறவு அங்காடியில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
10 கடைகளிலும் தலா 100 கிலோ வீதம் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக விலை உயர்வால் தக்காளி வாங்கி சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது நியாய விலை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்