என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி சேவைகள் மசோதா"
- எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாரதிய ஜனதாவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?
- டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டுவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கருப்பு நாள்!
எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாரதிய ஜனதாவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?
29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்!
மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.
"நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றார்.
- டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
- மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல. மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல.
மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
மசோதா நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.
அப்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் மோடி மதிக்கவில்லை. டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி நீதிமன்றத்தின் உத்தரவை கேட்க விரும்பவில்லை.
சட்டங்களை இயற்றும் அதிகாரம் எங்களிடம் உள்ளது என்று பாராளுமன்றத்தில் அமித் ஷா கூறினார். மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல.
ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக நான்கு கருத்துக் கணிப்புகளில் தோல்வியடைந்தது. அவர்கள் பின்கதவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றனர்.
இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு "கறுப்பு நாள்".இ து டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயலாகும்.
டெல்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநிலங்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.
- மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்றும் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
விவாதத்தின் முடிவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது. இந்நிலையில், டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார்.
- சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
டெல்லியில் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே உள்ள அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் டெல்லி நிர்வாகம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) கொண்டு வரவும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.
இந்த அவசர சட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து, பெரும் அமளிக்கு இடையே நிறைவேற்றியது. இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில், உள்துறை மந்திரி அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஜனநாயக விரோதமானது என்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
- மசோதாவை முறியடிக்க பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், கட்சி தலைவர்களையும் சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு திரட்டினார்.
- 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. எனவே, இந்த அவசர சட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.
அப்போது யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றும், டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால், விதிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமித் ஷா கூறினார்.
மேலும் இந்த மசோதாவைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தையும் அமித் ஷா முன்வைத்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சிதறிவிடும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படவில்லை, கூட்டணியை காப்பாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் என சாடினார்.
அமித் ஷா பதிலுரை வழங்கிய பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.