என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊராட்சி துறை பணிகள்"
- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
- இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகின்றது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 40 மாத திராவிட மாடல் ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இணையற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.40,968.68 கோடியில் 10,14,959 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. ரூ.10,584 கோடியில் 19,450 கி.மீ சாலைகள் மற்றும் 425 பாலங்கள், ரூ.3958.87 கோடியில் 3,29,906 ஊரகக் குடியிருப்புகள், ரூ.3958.87 கோடியில் கான்கிரீட் மேல் கூரைகள் அமைப்பு, ரூ. 594 கோடியில் ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள் பேருந்து நிலையங்கள், ரூ.262 கோடியில் சமத்துவபுரங்கள் சீரமைப்பு, ரூ.3500 கோடியில் 1,00,000 புதிய கான்கிரீட் வீடுகள் ரூ.50 கோடியில் 8 புதிய சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1,00,466 ஊரக குடியிருப்புகள் ரூ. 832 கோடி மதிப்பீட்டில் பழுது நீக்க பணி மேற்கொள்ளுதல், ரூ.2,808 கோடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் என கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில் நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும்விதமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின் கலன்கள் (யு.பி.எஸ்.) சாதனம் ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
தெரு விளக்குகள் பராமரித்தலில் தானியங்கி முறையினைப் புகுத்திடும் வகையில் இண்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஒ.டி.) முறையில் சோதனை முயற்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெரும் பொருட்டு 2021-22-ல் இருந்து இதுவரை 2,43,770 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் பிறகுடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்ட போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் அந்தக் குடியிருப்புகளுக்கு 5,110 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
நம்ம ஊரு சூப்பரு- சுகாதாரம் மற்றும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகத்தினரிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தவும், அதை நிலைநிறுத்தவும் சிறப்புப் பிரச்சாரம் ஆகஸ்ட் 15-ந் தேதி அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடத்தப்பட்டது.
"நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" செயல்படுத்தப்பட்ட போது 37 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் சுமார் 47,339 குப்பை கொட்டும் இடங்கள் 16,829 பொது இடங்கள், 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடிகள்.
45,824 அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், 47,949 கிரா மப்புற நீர் நிலைகள், 10,011 சமுதாய சுகாதார வளாகம், 15,69,348 மீட்டர் கழிவுநீர் வடிகால்கள் ஆகியவை சுமார் 14,31,591 பணியாளர்களைக் கொண்டு தீவிர துப்புரவு நடவடிக்கைகளில் பங்கேற்றுச் சுத்தம் செய்யப்பட்டன. ஊக்குவிப்பாளர்கள் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களால் 13,659 பள்ளிகள் மற்றும் 343 கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஒரே வாரத்தில் 4 லட்சம் மரங்கள் நடப்பட்டன.
தீவிர துப்புரவு நடவடிக்கையின் வாயிலாக 2,563.9 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் சுமார் 45 சதவீத கழிவுகள் குப்பைகளைப் பிரிக்கும் கொட்டகைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டும் மீதம் உள்ள கழிவுகள் நுண் உரமாக்கப்பட்டும், உரக்குழிகள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை அலகுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
2021-22-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு ஜனாதிபதியால் 3-ம் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது.
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் இதுவரை கிராமப் புறங்களின் 7151339 வீடுகளுக்கு ரூ.2,123.36 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரியாபட்டி பகுதிகளில் ஊராட்சி துறை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- 35000 லிட்டர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கம்பிக்குடி கிராமத்தில், சுரங்கம் மற்றும் கனிமவள நிதியிலிருந்து ரூ.3.18 கோடி மதிப்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளையும், பாப்பனம் கிராமத்தில், பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.13.65 லட்சம் மதிப்பில் 35000 லிட்டர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
வி.நாங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சம் மதிப்பிலான புதிய கிராம ஊராட்சி செயலகக் கட்டடம் கட்டும் பணிகளையும், முடுக்கன்குளம் -செக்கனேந்தல் இடையே கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.156.33 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் துலுக்கன்குளம் கிராமத்தில், இண்டஸ் வங்கி, பிரதான் அறக்கட்டளை மற்றும் மக்கள் பங்களிப்புடன் ரூ.5.25 லட்சம் மதிப்பில் கீழகள்ளிகுளம் கண்மாய் தூர்வாரும் மற்றும் மதகு சரிசெய்யும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, செயற் பொறியாளர் இந்துமதி, மாவட்ட ஊராட்சி செயலர்/மண்டல அலுவலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ், உதவி பொறியாளர்கள் காஞ்சனாதேவி, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்